பதிவு:2023-03-15 09:54:32
திருவள்ளூரில் ஐ.ஆர்.சி.டி.எஸ். தொண்டு நிறுவனம் சார்பாக மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆலோசனை
திருவள்ளூர் மார்ச் 14 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கம் மற்றும் ஐ.ஆர்.சி.டி.எஸ். தொண்டு நிறுவனம் சார்பாக மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதார திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கி பேசினார்.
எந்தவொரு தொழிலையும் செய்வதற்கு நம்மிடம் திறன் உள்ளது, செய்வதற்கான விருப்பமும் உள்ளது. அப்படியிருந்தாலும் அதனை ஊக்கப்படுத்துவதற்காகவும், தொழிலை மேம்படுத்துவதற்காகவும் துறையுடைய உறுதுணையும் மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு அதிகாரிகளுடைய ஒருங்கிணைப்பும் இங்கு தேவைப்படுகிறது. அதற்காக தான், இன்று மாவட்ட நிர்வாகம் சார்பாக மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையிலான ஒரு கருத்தரங்கு நடத்தப்படுகிறது. இந்த கருத்தரங்கில் வருகை புரிந்திருக்கும் பல்வேறு தன்னார்வ அமைப்புகளுக்கும், சுய உதவிக் குழுக்கள் சார்பாக வருகை புரிந்திருக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். இன்று நடத்தக்கூடிய இந்த கூட்டமானது கட்டாயமாக திருவள்ளுர் மாவட்டத்தை சார்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு பெருமளவில் ஊக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும் என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கம் மற்றும் ஐ.ஆர்.சி.டி.எஸ். தொண்டு நிறுவனம் சார்பாக மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் மாற்றுத்திறனாளிகள் மூலமாக உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களுக்கான விற்பனை கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்து பார்வையிட்டார்.
முன்னதாக திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராம் டி.ஆர்.பி.சி.சி.சி. இந்து கல்லூரியில் வருகிற 18.03.2023 அன்று முதல் நடைபெறவுள்ள மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் குறித்து பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படும் வகையில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக உருவாக்கப்பட்ட விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி),மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் செ.ஆ.ரிஷப், திருவள்ளூர் சார் ஆட்சியர் (பொ) கேத்ரின் சரண்யா,தமிழ்நாடு மாற்றுத்திறனாளி சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் பி.சிம்மசந்திரன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் கோ.மலர்விழி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தி.சண்முகவள்ளி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் எஸ்.அருள்ராஜ், திருவள்ளூர் மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் ஆர்.சேகர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநர் க.விஜயா, தொழிலாளர் துறை உதவி ஆணையர் (அமலாக்கம்) ச.சுதா, மாவட்ட சமூக நல அலுவலர் ஆர்.சுமதி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (பொ) காமராஜ் மற்றும் பல்வேறு அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.