இராமதண்டலம் கிராமத்தில் ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் :

பதிவு:2022-08-14 00:02:50



இராமதண்டலம் கிராமத்தில் ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் :

இராமதண்டலம் கிராமத்தில் ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் :

திருவள்ளூர் ஆக 13 : பூண்டி ஒன்றியத்தில் உள்ள ராமதண்டலம் கிராமத்தில் திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிபதி மற்றும் திருவள்ளூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு தலைவர் ஆணைப்படி திருவள்ளூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் மற்றும் சில்ரன் பிலீவ் சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு திருவள்ளூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலரும் மூத்த உரிமையியல் நீதிபதியான சாண்டில்யன் தலைமை தாங்கி பேசினார்.

சட்டப்பணிகள் ஆணைக்குழு சட்டம் சார்ந்த மற்றும் சட்டம் சாராத பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு உதவி செய்கிறது, குடும்ப பிரச்சனை, சொத்து பிரச்சனை, அடிப்படை வசதிகள், சட்டத்தை பற்றி புரிந்து கொள்ளுதல், அரசுநல திட்டங்களை பெறுதல் ஆகியவைகளுக்கு சட்டப்பணிகள் ஆலோசனை குழுவினை அணுகலாம் என்றும், குழந்தைகள், பெண்கள் சம்மந்தமான சட்டங்கள் குறித்தும், சட்ட விழிப்புணர்வை பொதுமக்கள் பெறுதல் அவசியம் என்றும், இலவசமான சேவைகள் மற்றும் வழிகாட்டுதல்களை தெரிவித்தார்.

பணம் செலவழித்து வழக்கறிஞர்களை நியமித்து வாதாட முடியாதவர்களுக்கு சட்ட பணிகள் ஆணைக்குழு வழக்கறிஞர்களை நியமித்து தங்களது பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கு உதவி செய்வதாக தெரிவித்தார். 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்தால் அது சட்டபடி தண்டனைக்குரிய குற்றமாகும், சிறார் திருமணத்தில் கலந்து கொண்டவர்களும் குற்றவாளி ஆவார்கள் என்றும், கட்டாய இலவச கல்வி சட்டம் குறித்தும், அனைத்து சிறார்களும் கல்வி பெறுவது சட்டப்படியான உரிமையாகும் என்றும், பெண்கள் சம்மந்தமான சட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தார்.

மேலும் குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தை திருமணம் தவிர்த்தல், தடுத்தல், 18 வயதிற்குள் இருக்கும் பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்தால் ஏற்படும் பின்விளைவுகள், குழந்தைகள் குடும்பத்திலும் சமுதாயத்திலும் சந்திக்கும் சவால்கள், குழந்தைகளின் பிரச்னைகளுக்கு தகவல் தெரிவிக்க கூடிய சைல்டு லைன் 1098, பெண்களுக்கான ஒன் ஸ்டாப் சேவை எண் 181 பற்றியும் எடுத்து கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து முகாமில் கலந்து கொண்டவர்கள் குழந்தை திருமண தடுப்பு உறுதி மொழி ஏற்றனர்.பின்னர் பொதுமக்கள் தங்கள் தேவைகளை குறித்து மூத்த உரிமையியல் நீதிபதியிடம் மனு அளித்தனர்.

இந்த முகாமில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் சங்கீதா மற்றும் உளவள ஆலோசகர் ஜான்சி, ராமதண்டலம் ஊராட்சி மன்ற தலைவி சுமதி சிவதாஸ், வார்டு உறுப்பினர்கள் தட்சிணா மூர்த்தி, ஞான சுந்தரி, பூவேந்தன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர், அங்கன்வாடி பணியாளர்கள், பள்ளி ஆசிரியைகள் மற்றும் ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவன இயக்குனர் ஸ்டீபன், கள ஒருங்கிணைப்பாளர்கள் கவிதா, பழனி, கிராம பொதுமக்கள், ஆகியோர் கலந்து கொண்டனர்.