திருத்தணி அருகே 12 ஆண்டுகளாக உரக்கிடங்கில் செயல்படும் அங்கன்வாடி மையம், குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறி? மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

பதிவு:2023-01-05 22:48:24



திருத்தணி அருகே 12 ஆண்டுகளாக உரக்கிடங்கில் செயல்படும் அங்கன்வாடி மையம், குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறி? மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை .0 ..

திருத்தணி அருகே 12 ஆண்டுகளாக உரக்கிடங்கில் செயல்படும் அங்கன்வாடி மையம், குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறி? மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

திருவள்ளூர் ஜன 06 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் கார்த்திகேயபுரம் ஊராட்சி வள்ளியம்மாபுரம் கிராமத்தில் ஊராட்சிக்கு சொந்தமான உரக்கிடங்கில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.

இந்த அங்கன்வாடி மையத்தில் தற்போது 15-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் அங்கன்வாடி மையத்திற்கு தனிக்கட்டிடம் இல்லாததால் கடந்த 12 ஆண்டுகளாக சிமெண்ட் ஓடு போட்ட உரக்கிடங்கு கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.

இந்த உரக்கிடங்கு கட்டிடம் தற்போது பழுதடைந்து ஆங்காங்கு விரிசல் ஏற்பட்டும் சிமெண்ட் ஓடுகள் உடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால், மழை காலங்களில் மழைநீர் கட்டிடத்தில் கசிவதாக கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் சேதம் அடைந்த நிலையில் கட்டிடம் இருப்பதால் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பெற்றோர் அச்சம் தெரிவிக்கின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் வள்ளியம்மாபுரம் கிராமத்தில் புதிய அங்கன்வாடி மையம் கட்டிடம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.