பதிவு:2023-01-05 22:51:14
திருத்தணி பேருந்து நிலையத்தில் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்த கடத்தல் 2 பேர் கைது
திருவள்ளூர் ஜன 06 : திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி பேருந்து நிலையத்தில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த இரண்டு இளைஞர்களை பிடித்து சோதனை மேற்கொண்டனர். சோதனையில் அவர்கள் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் திருத்தணியைச் சேர்ந்த சுபாஷ்சந்திரபோஸ் (19), தனுஷ் (19) என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் இருவரும் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து அதனை திருத்தணி பேருந்து நிலையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது.
இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்