பதிவு:2023-01-05 22:58:22
முக சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட டேனியா என்ற சிறுமியை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் நலம் விசாரித்து கூடுதல் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக வழி அனுப்பி வைத்தார் :
திருவள்ளூர் ஜன 06 : திருவள்ளூர் மாவட்டம், ஆவடி, மோரை பகுதியைச் சேர்ந்த டேனியா என்ற 9 வயது சிறுமி முக சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு விளிம்பின் நுனியில் இருக்கின்ற சின்னஞ்சிறு குழந்தை டேனியாவின் அவல குறலை 16.08.2022 அன்று கேட்டு பதிவு செய்தார்கள். ஏறக்குறை இரண்டரை இலட்சத்தில் ஒருவருக்கு வரக்கூடிய இந்த பேரி ரோம்பட் சின்ரோம் என்ற அரிய வகை நோயினால் இச்சிறுமி பாதிக்கப்பட்டு, ஏறக்குறைய ஆறாண்டு காலம் அவதிக்குள்ளாகியுள்ளார்.
அந்த சிறுமியின் அவல குறலை தமிழ்நாடு முதலமைச்சர் கேட்கப்பட்டதைத் தொடர்ந்து, இறைவனுக்கு ஒப்பாக அச்சிறுமிக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் அடுத்த நாளான 17.08.2022 அன்று பூவிருந்தவல்லி அடுத்து தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அச்சிறுமிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க உத்தரவிட்டு, இம்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அச்சிகிச்சையில் 10 மருத்துவக் குழுக்கள் ஒன்றாக இணைந்து அந்த குழந்தையை மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்தி, 23.08.2022 அன்று அந்த சிறுமிக்கு முக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை செய்யப்பட்ட அந்த குழந்தை ஏறக்குறைய 12 நாட்களுக்கு பிறகு பூரண குணமடைந்து 12.09.2022 அன்று அச்சிறுமியின் இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் எடுத்த சீரிய முயற்சியால், இரண்டாம் கட்டமாக அந்த குழந்தை சுலபமாக பேசும் வகையில் சிகிச்சை அளிக்கும் பொருட்டு வாயின் நார்தசை பகுதியில் கூடுதல் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக அச்சிறுமி தனியார் தண்டலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அச்சிறுமிக்கு இன்று சிறிய அளவில் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் நார்தசை பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது.
அதனைத் தொடர்ந்து, பூவிருந்தவல்லியை அடுத்த தண்டலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அச்சிறுமிக்கு முதற்கட்டமாக முக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு முக சிதைவு சரி செய்யப்பட்டதை தொடர்ந்து சுலபமாக பேசுவதற்கு ஏதுவாக சிகிச்சை அளிக்கும் பொருட்டு அனுமதிக்கப்பட்டுள்ள அச்சிறுமியை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வாயின் நார்தசை பகுதியில் கூடுதல் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக அச்சிறுமியை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் அறுவை சிகிச்சை அரங்கு வரை சென்று வழி அனுப்பி வைத்தார்.
இதில் ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமார், சுகாதார இணை இயக்குனர் செல்வகுமார், தனியார் மருத்துவமனை மருத்துவ பல்கலைக்கழக நிறுவனர் வீரய்யன், உள்ளாட்சி பிரதிநிதிகள், மருத்துவக் குழு மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.