பதிவு:2023-01-07 17:06:00
திருவள்ளூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளுக்கு உத்தமர் காந்தி விருதுக்கு விண்ணப்பிக்கலாம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :
திருவள்ளூர் ஜன 06 : முதலமைச்சர் தமிழ்நாடு சட்டப்பேரவை விதி எண்.110-இன் கீழ் 22.04.2022 அன்று சட்டப்பேரவையில் “கிராம ஊராட்சிகளில் வெளிப்படை தன்மையுடன் சிறந்த நிர்வாகத்தினை வழங்கி, அனைத்து அடிப்படை வசதிகளையும் பூர்த்தி செய்து, நீடித்த மற்றும் நிலைத்த வளர்ச்சி இலக்குகளை எட்டிடும் வகையில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளுக்கு உத்தமர் காந்தி விருது 2022-ஆம் ஆண்டு முதல் மீண்டும் வழங்கப்படும்” என அறிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் ஒரு கிராம ஊராட்சி தேர்வு செய்யப்பட்டு, தேர்வு செய்யும் முறையானது, முறையே வட்டார மற்றும் மாவட்ட அளவில் மேற்கொள்ளப்பட்டு, இயக்குநரக அளவில் கூராய்வு செய்யப்பட்டு அரசுக்கு முன்மொழியப்படும்.
மேலும் விருதுக்கு விண்ணப்பித்திட இணையதளத்தின் சுட்டி மூலம் http://tnrd.tn.gov.in என்றகிற முகவரியை தேர்வு செய்ய வேண்டும்.மேற்படி இணையதளத்தினுள் கிராம ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் முகவரி மற்றும் கடவுச் சொல்லை பயன்படுத்தி உள் நுழைய வேண்டும்.பயனரின் முகவரியில் அறிக்கை எண்.12ஐ சுட்ட வேண்டும். அரசாணையில் உள்ள அனைத்து தேர்வு காரணிகளும் அடங்கிய உள்ளீடு செய்திடும் படிவம் காணப்படும்.அப்படிவத்தினை முறையே பதிவு செய்து ‘Save’ பொத்தானைஅழுத்தி சேமிக்க வேண்டும்.
இவ்விணையதளம் வாயிலாக மேற்படி வழிமுறைகளை பின்பற்றி விருதுக்கு விண்ணப்பித்திடும் ஊராட்சிகளை தேர்வு செய்ய மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி மாவட்ட ஆட்சியர் - தலைவர்,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் - உறுப்பினர்,தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் - உறுப்பினர், உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) - ஒருங்கிணைப்பாளர் உறுப்பினர், அரசு சாரா நிறுவனம் -1
மாவட்ட அளவிலான குழு விண்ணப்பம் செய்த கிராம ஊராட்சிகளில் சிறந்த 5 கிராம ஊராட்சிகளை தேர்வு செய்து பட்டியலை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநரகத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளும்.அதன்படி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தலைமை வகிக்கும் கிராம ஊராட்சி 1, மகளிர் தலைமைவகிக்கும் கிராம ஊராட்சி 1,இதர சிறந்த கிராம ஊராட்சிகள் 3
எனவே நெறிமுறைகளை கடைபிடித்து அரசின் http://tnrd.tn.gov.in என்ற இணையதளத்தில் விருதுக்கான விண்ணப்பங்களை 17.01.2023-க்குள் பூர்த்தி செய்யுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.