பதிவு:2023-01-07 17:14:53
திருவள்ளூரில் ஜாதி பெயரை சொல்லி தகாத வார்த்தைகளால் பேசுவதாக அரசு மதுபான கடை மேற்பார்வையாளர் மீது விற்பனையாளர் ஆட்சியரிடம் புகார் :
திருவள்ளூர் ஜன 06 : திருவள்ளூரிலிருந்து புட்லூர் செல்லும் சாலையில் உள்ள அரசு மதுபான கடையில் (8728) கொப்பூர் பெருமாள் தெருவை சேர்ந்த ரவி என்பவர் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார் அதே கடையில் மேற்பார்வையாளராக ரவணையா என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மேற்பார்வையாளர் ரவணையா ஜாதி பாகுபாடு பார்த்து நடந்து கொள்வதாகவும் தன்னை ஜாதிப் பெயர் சொல்லி அழைத்து திட்டுவதாகவும் கடைக்குள் இருக்கும் தண்ணீரை குடித்தால் ஜாதி பெயர் சொல்லி திட்டி தண்ணீரை பிடுங்கி வெளியே ஊற்றி தன்னை தண்ணீர் குடிக்க விடாமல் நடந்து கொள்வதால் மிகுந்த மன உளைச்சல் அடைந்துள்ளார் விற்பனையாளர் ரவி.
இந்நிலையில் கடந்த மாதம் கடைக்குள் வைத்து பூட்டி உணவு தண்ணீர் இல்லாமல் உள்ளே கிடக்க வேண்டுமென கடையை பூட்டிவிட்டு சென்ற ரவணையாவின் சட்டையை பிடித்து சாவியை பிடுங்கி வெளியே வந்துள்ளார். அப்போது கூலிப்படை வைத்து கொலை செய்து விடுவதாக கொலை மிரட்டல் விடுத்ததாகவும் விற்பனையாளர் ரவி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.
அரசு மதுபான கடையில் விற்பனையாளரிடம் மேற்பார்வையாளர் ஜாதி பாகுபாடு பார்த்து அடிமைப்படுத்தும் விதமாக நடந்து கொள்வதாக ஆட்சியரிடம் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.