கே.ஜி.கண்டிகை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ- மாணவியர்களிடையே போதைப் பொருள் ஒழிப்பு குறித்து Collector@School என்ற சமூக விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி :

பதிவு:2023-01-07 17:20:08



கே.ஜி.கண்டிகை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ- மாணவியர்களிடையே போதைப் பொருள் ஒழிப்பு குறித்து Collector@School என்ற சமூக விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி :

கே.ஜி.கண்டிகை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ- மாணவியர்களிடையே போதைப் பொருள் ஒழிப்பு குறித்து Collector@School என்ற சமூக விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி :

திருவள்ளூர் ஜன 06 : திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக ஓர் சிறப்பு திட்டமாக Collector@School என்ற நிகழ்ச்சி அரசு பள்ளிகளில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையில் பயிலும் மாணவ, மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் ஆலோசனைப்படி 24.08.2022 அன்று அலமாதி, அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் துவங்கப்பட்டது,

அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டத்திற்குட்பட்ட கே.ஜி.கண்டிகை அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ- மாணவியர்களிடையே போதைப் பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் நடைபெற்ற Collector@School என்ற சமூக விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்து கொண்டு, மாணவ, மாணவியர்களோடு கலந்துரையாடி ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கி பேசினார்.

நாம் போதைப்பொருள் பழக்கத்திற்கு ஆளாவதும், ஆளாகமல் இருப்பதும் நாம் எடுக்கும் முடிவில் தான் உள்ளது. ஒரு சில முடிவுகள் சரியில்லை என்றால் அதை சரியான முடிவு எடுக்க ரிவர்ஸ் அல்லது யூ டர்ன் செய்ய வேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொண்டு செயல்பட வேண்டும். ஒரு சில தவறான பாதைகளில் நாம் சென்றால் திரும்ப வருவது மிகவும் கடினமாகும். அந்த மாதிரியான பாதைகளை நாம் தவிர்ப்பது நல்லது. அதற்காகன விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தான் இந்த Collector@School என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. நம் பள்ளியிலோ, நம் கிராமத்திலோ இதுபோன்று யாராவது போதைப்பழக்கத்திற்கு ஆளாகுபவர்களை தடுப்பது என்பது நாம் எடுக்கும் சரியான முடிவாகும். இந்த முடிவு எடுக்கும் பட்சத்தில் நம் வாழ்க்கையில் எடுப்பது ஒரு சிறந்த முடிவாகும்.

இந்த 13 முதல் 17 வயது வரை உள்ள நீங்கள் இந்த வயதில் எடுக்கக்கூடிய முடிவுகள் தான் உங்கள் வாழ்க்கையை நல்ல நிலையில் முன்னேறுவதற்கு தீர்மானிக்கிறது. இரண்டாவது நம் வாழ்க்கையில் நாம் என்ன வேண்டுமானாலும் ஆகலாம். சாதிக்கலாம். அதற்கு முக்கியமான விஷயம் நாம் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு எந்த இடத்தில் பிறந்தோம் அதாவது கிராமத்திலா, நகரத்திலா பிறந்தோம், வளர்ந்தோம் என்பது முக்கியமல்ல. நாம் எடுக்கும் நம் இலட்சயத்திற்கு, நம் பழக்க வழக்கத்திற்கு கொடுக்கக்கூடிய நேர்மையான வழி ஒன்று தான்.வாழ்க்கையில் ஒழுக்கத்துடன் இருந்து இலட்சியத்தை நோக்கி செயல்பட்டால் நாம் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்று கூறினார்.

அதனைத் தொடர்ந்து போதைப் பழக்கங்களின் தாக்கங்கள் மற்றும் மாணவர்களின் மனநலம் குறித்து திருத்தணி துணை காவல் கண்காணிப்பாளர் விக்னேஷ் தமிழ்மாறன்,போதைப்பழக்கங்களின் தாக்கங்கள் குறித்து கல்வியாளர் அருண் அமலன் மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர். முன்னதாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாணவ,மாணவியர்கள் போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் த.இராமன், திருத்தணி துணை காவல் கண்காணிப்பாளர் விக்னேஷ் தமிழ்மாறன், கல்வியாளர் அருள் அமலன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பவானி, தலைமை ஆசிரியர் ரேணுகாதேவி, ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.