சென்னை ரிப்பன் மாளிகையில் அறிவாயுதம் நாளிதழ் இணையதள செய்தி பதிப்பு துணைமேயர் மு. மகேஷ்குமார் வெளியிட்டார்.

பதிவு:2022-04-24 10:51:51



சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில், அறிவாயுதம் நாளிதழ் இணையதள பதிப்பை துணை மேயர் மு.மகேஷ் குமார் வெளியிட்டு தொடங்கி வைத்தார்

சென்னை ரிப்பன் மாளிகையில் அறிவாயுதம் நாளிதழ்  இணையதள செய்தி பதிப்பு துணைமேயர் மு.


மகேஷ்குமார் வெளியிட்டார்.

சென்னை ஏப்ரல் 20 சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் அறிவாயுதம் நாளிதழின் அதிகாரபூர்வ இணையத்தளம் www.arivayutham.com செய்தி வெளியீடு இன்று மாலை 3 மணி அளவில் நடைபெற்றது.

அறிவாயுதம் இணையதள பதிப்பினை சென்னை துணை மேயர் மு.மகேஷ் குமார் அவர்கள் வெளியிட்டு துவக்கி வைத்தார் .

கடந்த மூன்றாண்டு காலமாக அச்சு ஊடகமாக மட்டுமே வெளியிடப்பட்டிருந்த அறிவாயுதம் நாளிதழ் இப்பொழுது உலகெங்கும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள www.arivayutham.com இணையதள பதிப்பு வெளியீடு உதயமாகியுள்ளது. இதில் அரசியல், சினிமா, உலக செய்திகள், மாவட்ட செய்திகள், விளையாட்டு, மருத்துவம் இது போன்ற பல்வேறு தலைப்புகளில் பல்வேறு செய்திகளை வெளியிடப்படும் என அறிவாயுதம் நாளிதழின் நிர்வாக இயக்குனர் தா.தனசேகர் தெரிவித்துள்ளார்.

வெளியீட்டு விழாவில் தலைமை நிருபர்கள் பொன்னேரி கோபிநாத், திருச்சி அ. மரிய ஆரோக்கியசாமி, அம்பத்தூர் சுரேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.