சேவாலயா தொண்டு நிறுவனம் சார்பில் ராஜாஜி பிறந்த நாளையொட்டி நடத்தப்பட்ட போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவர்களுக்கு பரிசுகள் :

பதிவு:2023-01-07 20:21:53



சேவாலயா தொண்டு நிறுவனம் சார்பில் ராஜாஜி பிறந்த நாளையொட்டி நடத்தப்பட்ட போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவர்களுக்கு பரிசுகள் :

சேவாலயா தொண்டு நிறுவனம் சார்பில் ராஜாஜி பிறந்த நாளையொட்டி நடத்தப்பட்ட போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவர்களுக்கு பரிசுகள் :

திருவள்ளூர் ஜன 07 : திருவள்ளூர் அருகே கசுவா கிராமத்தில் சேவாலயா சார்பில் செயல்பட்டு வரும் மகாகவி பாராதியார் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மூதறிஞர் ராஜாஜியின் பிறந்த நாள்விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை நிர்வாகி முரளிதரன் தலைமை வகித்தார். இதில் முன்னாள் வானிலை ஆய்வாளர், எழுத்தாளர், மொழிப்பெயர்ப்பாளர் கே.வி.பாலசுப்ரமணியன் பங்கேற்று அங்கு வைத்திருந்த ராஜாஜி திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

பின்னர் அவர் பேசும் போது முதிர்ந்த அரசியல் ஞானம், ஆழ்ந்த அனுபவமும் கொண்ட ராஜாஜியின் நேர்மையும், எளிமையும் இன்றளவும் வியக்க வைக்கிறது. நாட்டில் உயர்ந்த பதவி வகித்த போதிலும், எளிமையாக வாடகை வீட்டிலேயே இறுதி வரையில் வசித்தார். சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக பொறுப்பேற்று, அங்கிருந்து வெளியேறிய போது, தனக்கு அளித்த பொருள்கள் அனைத்தையும் அரசிடம் ஒப்படைத்துவிட்டு, வெறும் கைத்தடியோடு வெளியேறினார். விடுதலை போராட்டம், அரசு நிர்வாகத்தில் பல்வேறு பணிகளை ஆற்றினாலும் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டவர். அதன் தொடர்ச்சியாக ஆங்கிலம், தமிழிலும் பல்வேறு நூல்களையும் எழுதியுள்ளார். அவர் எழுதிய சக்கரவர்த்தி திருமகன், வியாசர் விருது பிரசித்தி பெற்ற நூல்களாகும்.

இதற்காக 1858 இல் சாகித்ய அகாடமி விருதும், தலைசிறந்த நிர்வாகியாக விளங்கியதற்காக 1959-இல் பாரத ரத்னா விருது அரசு வழங்கிச் சிறப்பித்தது.அதேபோல் இங்கு பயிலும் மாணவ, மாணவிகள் ஒழுக்கம், நேர்மையுடன் பயின்று சிறப்பிடம் பெறவும் என அவர் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து வானிலை, காலநிலை மற்றும் இயற்கை பேரழிவுகள் உள்பட வானிலை பற்றிய நுண்ணறிவுகள் குறித்து மாணவர்கள் கேட்ட கேள்விக்கு விளக்கமாக அவர் பதில் அளித்தார்.

அதற்கு முன்னதாக நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை, விநாடி, வினா ஆகிய போட்டிகளில் 13 மாவட்டங்களில் இருந்து 564 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள் 21 பேருக்கு பரிசுகளையும், கடந்த டிச.29+இல் சென்னையில் சமூக நலத் துறை நடத்திய மண்டல அளவிலான போட்டியில் சேவாலயாவைச் சேர்ந்த சிறப்பிடம் பெற்று பதக்கம் வென்றவர்களை பாராட்டினார். அதில் சேவாலயா பள்ளியைச் சேர்ந்த 10 பேர் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதில் நிறைவாக தலைமை ஆசிரியர் கிங்ஸ்டன், ஆனந்தன் ஆகியோர் நன்றி கூறினர்.