ஒன்றிய அரசுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் என மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் :

பதிவு:2023-01-07 20:24:34



ஒன்றிய அரசுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் என மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் :

ஒன்றிய அரசுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் என மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் :

திருவள்ளூர் ஜன 07 : திருவள்ளூர் மாவட்ட தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நாட்காட்டி வெளியீட்டு விழா மற்றும் மாவட்ட செயற்குழு கூட்டம் திருவள்ளூர் வீனஸ் கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது. மாவட்டத்தலைவர் செ. குமார் மற்றும் மாவட்டச்செயலாளர் ரா. பிரபாகரன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

விழாவில் 2023 ஆம் ஆண்டிற்கான நாட்காட்டியனது, மேனாள் மாவட்டத் தலைவர் எஸ்.பி.சுப்ரமணியன் முன்னிலையில் மாவட்டத்தலைவர் செ.குமார் மற்றும் மாவட்டச்செயலாளர் ரா. பிரபாகரன் ஆகியோர் தலைமையில் மாநில தலைவர் ச.பாஸ்கரன் நாட்காட்டியை வெளியிட வீனஸ் கல்வி நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர். வெங்கடேசன் பெற்றுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மாவட்ட செயற்குழு கூட்டத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்க வேண்டிய அகவிலைப்படி உயர்வை மொத்தமாக கணக்கிட்டு நிலுவைத்தொகையை வழங்க வேண்டும், ஒன்றிய அரசுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள நிலுவைத்தொகையை வழங்க வேண்டும், தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு ஊதியத்தை வழங்கிட வேண்டும் போன்ற தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

அன்றைய தினமே மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ராமனை சந்தித்து நாட்காட்டி வழங்கப்பட்டது மேலும் தேர்வுநிலை,சிறப்புநிலை சார்ந்து ஜமாபந்தி நடத்திட கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

இதில் மாநிலச்செயலாளர் ரா. கணேசன், கௌரவத்தலைவர் ச.பு. சௌத்திரி, அமைப்புச் செயலாளர் ந. அருள்ஞானபிரகாஷ், துணைத்தலைவர்கள் என்.சரவணன், பி.திருமலை, இணைச்செயலாளர்கள் ஏ.ஜி. விஜயகுமார், ஏ. இளையராஜா மகளிரணி செயலாளர் எச். பவானி, இணைச்செயலாளர் ஜெ.ஜூலி மற்றும் மாவட்ட வட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.இறுதியில் மாவட்டப் பொருளாளர் த. சக்கரபாணி நன்றி கூறினார்.