சித்த மருத்துவர் ஷர்மிகாவுக்கு இந்திய மருத்துவ இயக்குனரகம் நோட்டீஸ்

பதிவு:2023-01-09 09:42:56



சித்த மருத்துவர் ஷர்மிகாவுக்கு இந்திய மருத்துவ இயக்குனரகம் நோட்டீஸ்

சித்த மருத்துவர் ஷர்மிகாவுக்கு இந்திய மருத்துவ இயக்குனரகம் நோட்டீஸ்

சென்னை, சித்தா மருத்துவர் ஷர்மிகா இணையத்தில் தவறான மருத்துவ ஆலோசணைகளை வழங்குவதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது.

அந்தவகையில், லோப்ஜாமூன் சாப்பிட்டால் 3 கிலோ எடை கூடும், குப்புற படுத்தால் மார்பக புற்றுநோய் வரும் உள்ளிட்ட சர்ச்சையான கருத்துக்களை சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் சித்தா மருத்துவர் ஷர்மிகா வெளியிட்ட கருத்துகள் குறித்து விளக்கம் கேட்டு இந்திய மருத்துவ இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க மருத்துவர் ஷர்மிகாவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் இந்திய மருத்துவ ஆணையர் மற்றும் தாளாளர் கொண்ட குழு முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.