திருவள்ளூர் என்.ஜி.ஒ காலனி நியாய விலைக்கடையில் ரூ.1000-ம் ரொக்கம் உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்புகள் : நகர்மன்ற தலைவர் உதயமலர் பொன்பாண்டியன் வழங்கினார் :

பதிவு:2023-01-11 12:07:05



திருவள்ளூர் என்.ஜி.ஒ காலனி நியாய விலைக்கடையில் ரூ.1000-ம் ரொக்கம் உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்புகள் : நகர்மன்ற தலைவர் உதயமலர் பொன்பாண்டியன் வழங்கினார் :

திருவள்ளூர் என்.ஜி.ஒ காலனி நியாய விலைக்கடையில் ரூ.1000-ம் ரொக்கம் உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்புகள் : நகர்மன்ற தலைவர் உதயமலர் பொன்பாண்டியன் வழங்கினார் :

திருவள்ளூர் என்.ஜி.ஒ காலனி நியாய விலைக்கடையில் ரூ.1000-ம் ரொக்கம் உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்புகள் : நகர்மன்ற தலைவர் உதயமலர் பொன்பாண்டியன் வழங்கினார் : திருவள்ளூர் ஜன 11 : தமிழ்நாடு முதலமைச்சர் பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, ரூ.1000-ம் ரொக்கம் உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்புகள் மற்றும் இலவச வேட்டி, சேலைகள் வழங்கிடும் பணிகளை 09.01.2023 அன்று தொடங்கி வைத்ததை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் நடைமுறையில் உள்ள 6,20,095 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 927 குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்புடன் ரூ.1,000 ரொக்கத் தொகையும் ஒரே நேரத்தில் நியாய விலைகடைகளின் மூலமாக 12.01.2023 தேதிக்குள் வழங்கப்பட உள்ளது. அதன்படி திருவள்ளூர் என்.ஜி.ஒ காலனியில் எஸ். சேகர் விற்பனையாளராக உள்ள நியாய விலைக்கடையில் ரூ.1000-ம் ரொக்கம் உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் உதயமலர் பொன்பாண்டியன் கலந்து கொண்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, ரூ.1000 ம் ரொக்கம் உள்ளிட்ட சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார். அப்பொழுது பொதுமக்கள் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்புகள் தரமானதாக உள்ளதாக கூறி தமிழ்நாடு முதலமைச்சருக்கும், நகர்மன்ற தலைவர் உதயமலர் பொன்பாண்டியனுக்கும் நன்றிகளையும்,மனமார்ந்த நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இதில் முன்னாள் நகர்மன்ற தலைவர் பொன்பாண்டியன், நகர்மன்ற உறுப்பினர் ஆர் விஜயகுமார், வி. துரைராஜன், ஏ.டி.குலோத்துங்கன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.