பதிவு:2023-01-11 12:08:52
திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் மஞ்சப்பை விற்பனை இயந்திரம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்தார் :
திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் மஞ்சப்பை விற்பனை இயந்திரம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்தார் :
திருவள்ளூர் ஜன 11 : தமிழக அரசு கடந்த செப்டம்பர் மாதம் சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டு, “பிளாஸ்டிக்களுக்கு எதிரான மக்கள் பிரச்சாரம்” செயல்படுத்தப்பட வேண்டும் என்றும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் பங்குதாரர்களை அழைத்து மக்கள் இயக்கம் தொடங்கப்படும் என்றும் அறிவித்தது.
அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் “ ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக உள்ள மஞ்சப்பை உபயோகம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து முதன் முறையாக மஞ்சப்பை வழங்கும் இயந்திரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், திருவள்ளூரில் உள்ள மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகத்திலும் நிறுவப்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
மேலும் திருவள்ளூர் பேருந்து நிலையம், ஆவடி பேரூந்து நிலையம், பொன்னேரி பேரூந்து நிலையம், திருத்தணி முருகன் கோயில் ஆகிய இடங்களில் விரைவில் மஞ்சப்பை விற்பனை இயந்திரம் நிறுவி பொது மக்கள் பயன்பாட்டிற்கு சமர்ப்பிக்கபட உள்ளதாக ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவித்திருந்தார்.
அதன்படி திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் திருவள்ளூர் நடராட்சி சார்பாக மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கத்தின் கீழ் அமைக்கப்பட்ட மஞ்சப்பை விற்பனை இயந்திரத்தின் செயல்பாட்டினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்து, ஒரு முறை பயன்படுத்தி தூக்கிய எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக எளிதில் மக்கும் தன்மையுடைய இயற்கையில் கிடைக்கும் மாற்றுப் பொருட்களான துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என மஞ்சப்பையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அப்பொழுது மஞ்சப்பை விற்பனை இயந்திரத்தை நிலையான முறையில் பராமரிக்க முடியும். புதிய ரூ.1,புதிய ரூ.2, ரூ.5 மற்றும் ரூ.10 நாணயங்களை ஏற்றுக்கொள்வதற்கு எலக்ட்ரானிக் காயின் வேலிடேட்டரும் ரூ.10 மதிப்புள்ள எலக்ட்ரானிக் நோட்டு வேலிடேட்டரும் இந்த இயந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ளதால் அதனை செலுத்தி தேவையான துணிபைகளை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து பொது மக்களுக்கு மஞ்சப் பை குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் பொது மக்களுக்கு வழங்கினார்.
இதில் திருவள்ளூர் நகராட்சி ஆணையர் க. ராஜலட்சுமி, சுகாதார அலுவலர் கே.ஆர்.கோவிந்தராஜூலு, சுகாதார ஆய்வாளர் வெயில் முத்து,தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் சம்பத்,நகராட்சி பணியாளர்கள்,பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொணடனர்.
=============================================================================
திருவள்ளூர் என்.ஜி.ஒ காலனி நியாய விலைக்கடையில் ரூ.1000-ம் ரொக்கம் உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்புகள் : நகர்மன்ற தலைவர் உதயமலர் பொன்பாண்டியன் வழங்கினார் :