காட்டுப்பாக்கம் கூட்டுறவு நியாய விலைக் கடையில் 811 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000-ம் ரொக்கம், பொங்கல் பரிசு தொகுப்புகள் மற்றும் இலவச வேட்டி, சேலைகள் : அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார் :

பதிவு:2023-01-11 12:11:06



காட்டுப்பாக்கம் கூட்டுறவு நியாய விலைக் கடையில் 811 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000-ம் ரொக்கம், பொங்கல் பரிசு தொகுப்புகள் மற்றும் இலவச வேட்டி, சேலைகள் : அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார் :

காட்டுப்பாக்கம் கூட்டுறவு நியாய விலைக் கடையில் 811 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000-ம் ரொக்கம், பொங்கல் பரிசு தொகுப்புகள் மற்றும் இலவச வேட்டி, சேலைகள் : அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார் :

திருவள்ளூர் ஜன 11 : தமிழ்நாடு முதலமைச்சர் பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, ரூ.1000-ம் ரொக்கம் உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்புகள் மற்றும் இலவச வேட்டி, சேலைகள் வழங்கிடும் பணிகளை தொடங்கி வைத்ததை தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றியம், காட்டுப்பாக்கம் பகுதியில் புதிதாக உருவாக்கப்பட்ட கூட்டுறவு நியாய விலைக் கடையில் கூட்டுறவுத் துறை சார்பாக 811 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் மற்றும் இலவச வேட்டி, சேலைகளை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் வழங்கி பேசினார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் மீனவர் கூட்டுறவு சங்கங்கள் ஆகியன நடத்தும் மொத்தம் 1,133 நியாய விலைக் கடைகள் மூலம் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள மொத்தம் 6,20,095 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை அகதிகள் 927 ஆக மொத்தம் 6,21,022 குடும்பதாரர்களுக்கு இன்று முதல் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரையுடன் ரூ.1000 ரொக்கப்பணம் மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியன அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. மேலும், காட்டுப்பாக்கம்-1 என்ற நியாயவிலைக் கடையில் 2257 குடும்ப அட்டைகள் உள்ள நிலையில், பொதுமக்கள் கோரிக்கையினை ஏற்று தமிழக அரசின் ஆணை பெற்று, 811 குடும்ப அட்டைகள் பிரிக்கப்பட்டு காட்டுப்பாக்கம் எண்.3 என்ற புதிய முழு நேர நியாய விலைக்கடை துவக்கி வைத்து பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்படுகிறது.

அதன்படி திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றியம், காட்டுப்பாக்கம் பகுதியில் புதிதாக உருவாக்கப்பட்ட கூட்டுறவு நியாய விலைக் கடையில் கூட்டுறவுத் துறை சார்பாக 811 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் மற்றும் இலவச வேட்டி, சேலைகளை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் வழங்கப்பட்டது.

தமிழ் நாட்டுக்கும், தமிழ் மக்களுக்கும், கடல் கடந்து வாழும் தமிழர்களுக்கும், தமிழ் மொழிக்கும் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு செயல்படுபவர் தமிழ்நாடு முதலமைச்சர் சூரியனுக்கு நன்றி செலுத்தும் நாளாக தான் உலகம் முழுவதும் இந்த பொங்கல் திருநாளை கொண்டாடுகிறோம். அப்படிப்பட்ட தமிழர் திருநாளுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என பால்வளத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

இதில் பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தி.சண்முகவள்ளி, துணைப்பதிவாளர் விழா குழு உறுப்பினர் அ.கார்த்தவராயன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.