பதிவு:2023-01-11 12:20:31
பள்ளிப்பட்டு அருகே 80 வயது மூதாட்டியின் வீட்டின் பூட்டை உடைத்து 33 சவரன் நகை, 650 கிராம் வெள்ளி,ரூ. ஒரு லட்சம் ரொக்கம் கொள்ளை :
திருவள்ளூர் ஜன 11 : திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அடுத்த கீச்சலம் கிராமத்தைச் சேர்ந்தவர் 80 வயது மூதாட்டி அருணா.இவரது மகன் மும்பையில் வேலை செய்து வருவதால் மகன் ஜானகிராமன் வீட்டில் வசித்து வருகிறார். இருப்பினும் கீச்சலம் கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு அடிக்கடி வந்து சில நாட்கள் தங்கி செல்வார் என்று கூறப்படுகின்றது. இந்நிலையில் வீடு பூட்டியிருப்பதை நோட்டமிட்டுள்ள மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து நகை, பொருட்கள் திருடிச் சென்றது குறித்து அக்கம் பக்கத்தினர் மும்பையயில் உள்ள மூதாட்டி அருணாவிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து கீச்சலம் கிராமத்தில் உள்ள வீட்டிற்கு வந்த மூதாட்டியின் மகன் ஜானகிராமன் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 33 சவரன் நகை, 650 கிராம் வெள்ளி மற்றும் ஒரு லட்சம் ரொக்கம் கொள்ளை போனது தெரியவந்தது. இதனையடுத்து இந்த கொள்ளை சம்பவம் குறித்து பொதட்டூர் பேட்டை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்த கொள்ளைச் சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.