பதிவு:2022-04-21 12:09:12
திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா திறந்து வைத்தார்
திருவள்ளூர் ஏப் 21 : கோடை வெயிலை சமாளிக்க ஏதுவாக ஏழை எளிய மக்களுக்காக நீர் மோர் பந்தலை அதிமுக சார்பில் திறந்திட வேண்டும் என்ற அதிமுக தலைமையின் அறிவுறுத்தலின் பேரில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகர செயலாளரும், நகர்மன்ற உறுப்பினருமான ஜி.கந்தசாமி தலைமையில் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.
திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் நகர கூட்டுறவு வங்கி தலைவரும், அம்மா பேரவை மாவட்ட துணை செயலாளருமான கே.பி.எம். எழிலரசன் ஏற்பாட்டில் நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா திறந்து வைத்து இளநீர், தர்பூசணி,மோர் மற்றும், ரோஸ் மில்க் ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கினார். இதில் அதிமுக நிர்வாகிகள் வேல்முருகன், ஜெயாநகர் குமரேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து பஜார் வீதியில் நகர்மன்ற உறுப்பினர் சுமித்ரா மற்றும் நகர 3-வது வார்டு கிளை செயலாளர் வெங்கடேசன், 4-வது வார்டு கிளை செயலாளர் தணிகைமலை, 5-வது வார்டு கிளை செயலாளர் சீனிவாசன் ஏற்பாட்டில் நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர், ரஸ்னா, தர்பூசணி உள்ளிட்ட குளிர்ச்சியான பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சிகளில் நகர அவைத்தலைவர் ராதாகிருஷ்ணன்,நகர இணை செயலாளர் நாகம்மாள் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.