மாற்றுத்திறனாளிகள் ஆவின் பாலகம் அமைக்க அனுமதி வழங்க வேண்டும் மாற்றுத்திறனாளிகள் நலவாழ்வு சங்கத்தினர் திருவள்ளூரில் கோரிக்கை மனு :

பதிவு:2023-01-11 12:30:29



மாற்றுத்திறனாளிகள் ஆவின் பாலகம் அமைக்க அனுமதி வழங்க வேண்டும் மாற்றுத்திறனாளிகள் நலவாழ்வு சங்கத்தினர் திருவள்ளூரில் கோரிக்கை மனு :

மாற்றுத்திறனாளிகள் ஆவின் பாலகம் அமைக்க  அனுமதி வழங்க வேண்டும் மாற்றுத்திறனாளிகள் நலவாழ்வு சங்கத்தினர் திருவள்ளூரில் கோரிக்கை மனு :

திருவள்ளூர் ஜன 11 : தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆவின் பாலகம் அமைக்க அனுமதி வழங்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் நலவாழ்வு சங்கத்தினர் திருவள்ளூர் மாவட்ட தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத்திறனாளிகள் நலவாழ்வு சங்க தலைவர் ஜெயவேல் தலைமையில் கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில் 21 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித் தொகை ரூ.1500 என உயர்த்தி வழங்கிய முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர். மத்திய அரசின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் மூலம், தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் மூலம், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி பகுதியில் முருக்கம்பட்டு, தாழவேடு, அருங்குளம் ஆகிய இடங்களில் வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இந்த குடியிருப்புகளில் தகுதியான வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி ஒன்றியத்திற்குற்பட்ட கார்த்திகேயபுரம், சின்னகடம்பூர் ஆகிய பகுதியில் நிலங்களை சர்வே செய்து மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்க வேண்டும். அதேபோல் 4 சதவீத இட ஒதுக்கீட்டில் மாற்றுத்திறனாளியை திருமணம் செய்து கொள்ளும் மாற்றுத்திறனாளிக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதோடு, அனைவருக்கும் கல்வி உரிமை பெறும் சட்டப்படி வழங்கும் ஒதுக்கீட்டில் மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகளுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் புழக்கத்தில் உள்ள போலி அடையாள அட்டை புழக்கத்தில் உள்ளது. குறிப்பாக காது மற்றும் செவித்திறன் குறைபாடு என அழைக்கப்படும் போலி மாற்றுத்திறனாளிகள் அட்டைகளை சிறப்பு முகாம் நடத்தி தகுதியானோருக்கு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

தமிழகத்தில் இயங்கும் அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் ஆவின் பாலகம் அமைக்க அனுமதி வழங்க வேண்டும். 75 சதவிகிதம் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிக்கு வழங்கப்படும் உதவித் தொகையை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கவும் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.