பூந்தமல்லி தொகுதிக்குட்பட்ட 3 வெவ்வேறு பகுதிகளில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி : ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ., துவக்கி வைத்தார் :

பதிவு:2023-01-11 12:31:53



பூந்தமல்லி தொகுதிக்குட்பட்ட 3 வெவ்வேறு பகுதிகளில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி : ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ., துவக்கி வைத்தார் :

பூந்தமல்லி தொகுதிக்குட்பட்ட 3 வெவ்வேறு பகுதிகளில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி : ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ., துவக்கி வைத்தார் :

திருவள்ளூர் ஜன 11 : தமிழகத்தில் 2.19 கோடி குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஆளுயர கரும்பு, மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம், வேட்டி, சேலை ஆகியவற்றை வழங்க முதல்வர் உத்தரவிட்டார்.

அதன்படி பூந்தமல்லி தொகுதிக்குட்பட்ட 3 வெவ்வேறு பகுதிகளில் இன்று பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்படி குத்தம்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சிக்கு பூந்தமல்லி மேற்கு ஒன்றிய செயலாளர் டி.தேசிங்குராஜா தலைமை தாங்கினார்.இதில் தலைமை செயற்குழு உறுப்பினரும், மாநில ஆதிதிராவிட நலக்குழு செயலாளருமான ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ., சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினார்.

இதில் நிர்வாகிகள் பரமேஸ்வரி கந்தன், ஒன்றிய கவுன்சிலர் என்.பி.மாரிமுத்து, ஒன்றிய நிர்வாகிகள் இ.கந்தபாபு, சி.அண்ணகுமார், பா.கந்தன், எம்.குணாசேகர், ஜி.சுகுமார், ஜி.சி.சி.கருணாநிதி, ஜி.பி.பரணிதரன், இ.பிரதிப், ஜி.பிரவின் குமார், கவிஞர் ராஜேஷ், அருள் அசோக், சீதாபதி கிருஷ்ணன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அதே போல் கொரட்டூர் ஊராட்சி புதுசத்திரம் கிராமத்தில் நடைபெற்ற பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியிலும் பூந்தமல்லி எம்எல்ஏ., ஆ.கிருஷ்ணசாமி கலந்து கொண்டு வழங்கினார். இதில் நிர்வாகிகள் எம்.குணசேகர், நிர்வாகிகள், சுமதி விஜயகுமார், கே.கோபிநாத், வார்டு உறுப்பினர்கள் பி.ரம்யா, ஜி.காமாட்சி கோவிந்தராஜ், டி.செந்தில், டில்லிபாபு, ஆறுமுகம், கோவிந்தராஜ், டி.கல்பனா தேவராஜ், மு.தே.ராஜேஷ், பி.யமுனாதேவி பாரதிராஜா , எம்.சுரேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதனைத் தொடர்ந்து கூடப்பாக்கத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஆளுயர கரும்பு, மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம், வேட்டி, சேலை ஆகியவற்றை வழங்கி பூந்தமல்லி எம்எல்ஏ., ஆ.கிருஷ்ணசாமி பேசினார். அப்போது தமிழகத்தில் 2.19 கோடி குடும்ப அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசாக 2500 கோடி ரூபாயை தமிழக முதல்வர் வழங்குவதை செலவாக கருதாமல் பொங்கல் பண்டிகையை அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்ற மனநிறைவோடு வழங்குவதாக தெரிவித்தார்.இதில் நிர்வாகிகள் சேட்டு, கே.என்.சுப்பிரமணி சந்திரசேகர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.