திருத்தணி அடுத்த நல்லாட்டூர் பகுதியில் விளை நிலங்களில் மாடுகள் மேய்ந்ததால் மாடுகளை கட்டி வைத்த விவசாயி : பாதிக்கப்பட்டவர்கள் ஆர்டிஓவிடம் கொடுத்த புகாரில் வருவாய்த்துறையினர் மாடுகளை மீட்டு நடவடிக்கை :

பதிவு:2023-01-12 20:45:28

திருவள்ளூர் ஜன 12 : திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம், நல்லாட்டூர் காலனியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தங்களுடைய கால்நடைகளை ஆற்றங்கரையோரம் மேய்ச்சலுக்காக விட்டுள்ளனர். மேய்ச்சலுக்கு சென்ற மாடுகள் மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர்.

இந்நிலையில் என்.என். கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த அசோக் என்பவருக்கு சொந்தமான விளை நிலத்தில் மாடுகள் மேய்ந்ததால் அதனை தனது வீட்டில் அடைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து நல்லாட்டூர் காலனியை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் நிலத்தின் உரிமையாளர் அசோக்கிடம் மாடுகளை விடும்படி கேட்டுள்ளனர். நல்லாட்டூர் காலனியைச் சேர்ந்தவர்களின் மாடுகள் தொடர்ந்து விளைநிலங்களை சேதப்படுத்துவதால் நிறைய சேதம் ஏற்பட்டு அதனால் இழப்பு ஏற்பட்டதாகவும் இதனால் மாடுகளை விட மாட்டேன் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் திருத்தணி ஆர்டிஓ., அஸ்ரத் பேகத்திடம் தகவல் தெரிவித்தனர். அதனையடுத்து ஆர்டிஓ வின் உத்தரவின் பேரில் விரைந்து சென்ற வருவாய்த் துறையினர் நிலத்தின் உரிமையாளரிடம் சமரசம் பேசி 15 மாடுகளை நல்லாட்டூர் காலனி மக்களிடம் ஒப்படைத்தனர். இதனால் விரைந்து நடவடிக்கை எடுத்த வருவாய் ஆர்டிஓ., ஹஸ்ரத் பேகத்திற்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.