ஃபாஸ்ட் புட் போன்ற உணவுகளால் உடல் ஆரோக்கியத்தை இழந்து வரும் மக்களுக்கு பெண்கள் இணைப்பு குழு சார்பில் சிறுதானிய உணவு பொங்கல் வைத்து விழிப்புணர்வு :

பதிவு:2023-01-12 20:49:29



ஃபாஸ்ட் புட் போன்ற உணவுகளால் உடல் ஆரோக்கியத்தை இழந்து வரும் மக்களுக்கு பெண்கள் இணைப்பு குழு சார்பில் சிறுதானிய உணவு பொங்கல் வைத்து விழிப்புணர்வு :

ஃபாஸ்ட் புட் போன்ற உணவுகளால் உடல்  ஆரோக்கியத்தை இழந்து வரும் மக்களுக்கு பெண்கள் இணைப்பு குழு சார்பில் சிறுதானிய உணவு பொங்கல் வைத்து  விழிப்புணர்வு :

திருவள்ளூர் ஜன 12 : கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழக மக்கள் ஆரோக்கியமான உணவுகளான சிறுதானியங்கள் குதிரைவாலி, கேழ்வரகு, தினை, வரகு, சாமை, கம்பு, பனிவரகு, சோளம் போன்றவற்றை சமைத்து சாப்பிட்டு உடல் ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் பெற்று வந்தனர். நாளடைவில் நவீன உலகம் என கார்ப்பரேட்களின் ஆதிக்கத்தில் மக்கள் துரித உணவு, பாக்கெட் செய்யப்பட்ட கெமிக்கல் கலப்பட உணவு ஆகியவற்றை உண்டு வந்ததால் உடல் ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் இழந்து வருகின்றனர்.

இந்த நிலையில் அதிக சத்துக்கள் நிறைந்த மருத்துவ குணங்களையும் உள்ளடக்கிய சிறுதானிய உணவுகளால் மட்டுமே இழந்த ஆரோக்கியத்தை திரும்ப பெற முடியும் என இந்தியாவுடன் வங்கதேசம், கென்யா, நேபாளம், நைஜீரியா, ரஷ்யா, செனகல் ஆகிய நாடுகள் இணைந்து எடுத்த முன்னெடுப்பை 70 நாடுகள் வழிமொழிய 193 ஐ.நா. சபையின் உறுப்பு நாடுகள் இந்தத் தீர்மானத்தை ஒருமனதாக ஆதரித்ததால், 2023-ம் ஆண்டை சிறுதானியங்களுக்கான சர்வதேச ஆண்டாக ஐ.நா. அறிவித்திருக்கிறது.

இதையொட்டி தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு சார்பில் சர்வதேச சிறுதானிய ஆண்டு 2023 குறித்து தீவிர பிரச்சாரம் செய்யும் வகையில் கடம்பத்தூர் ஒன்றியம் கொட்டையூர் ஊராட்சிக்கு உட்பட்ட நரசமங்கலம் கிராமத்தில் சிறுதானிய பொங்கல் விழா நடத்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

பெண்கள் இணைப்பு குழு சார்பாக தமிழகம் முழுவதும் சத்தான சிறுதானிய உணவு குறித்த பிரச்சாரம் செய்து வருகிறோம். அதன் தொடக்கமாக இங்கு சிறுதானிய பொங்கல் வைத்து கொண்டாடுகிறோம். வரும் பொங்கல் பண்டிகை அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து இல்லங்களிலும் சிறுதானிய பொங்கல் வைக்க வேண்டும்.

இதன் மூலம் அனைவரும் உடல் ஆரோக்கியத்தை பேண வேண்டும் என்பதை வலியுறுத்தி தொடர்ந்து 21 மாவட்டங்களில் பிரச்சாரம் செய்ய உள்ளோம் என பெண்கள் இணைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் பானு, மாநில செயற்குழு உறுப்பினர் கமலா ஆகியோர் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியின் போது பெண்கள் இணைப்பு குழு நிர்வாகிகள் அருள், கொட்டையூர் ஈசன் மற்றும் கிராம பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்