திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள இந்தியன் வங்கியின் பல்வேறு கிளைகள் மூலம் 93 நபர்களுக்கு ரூ.8.53 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வகையான கடன்கள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார் :

பதிவு:2023-01-12 20:51:36



திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள இந்தியன் வங்கியின் பல்வேறு கிளைகள் மூலம் 93 நபர்களுக்கு ரூ.8.53 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வகையான கடன்கள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார் :

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள இந்தியன் வங்கியின் பல்வேறு கிளைகள் மூலம் 93 நபர்களுக்கு ரூ.8.53 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வகையான கடன்கள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார் :

திருவள்ளூர் ஜன 12 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கத்தில் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் இந்தியன் வங்கியின் பல்வேறு கிளைகள் மூலம் 93 நபர்களுக்கு ரூ.8.53 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வகையான கடன்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கி பேசினார்.

இன்று வழங்கப்பட்ட கடன்களை எவ்வாறு முறையாக பயன்படுத்தி தங்கள் தொழிலை மேம்படுத்துவது என்பது குறித்தும், தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய யுக்திகள் குறித்தும், சுய தொழில் புரிவதில் இளைய தலைமுறையினர் ஆர்வத்துடன் பங்கேற்று நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவது குறித்தும், தொழில் வளர்ச்சிக்காக பெற்ற கடன்களை முறையாக பயன்படுத்தி குறிப்பிட்ட காலத்திற்குள் அக்கடன்களை திருப்பி செலுத்துவது குறித்தும் இதன் மூலம் கடன் பெற்றவர்கள் பெறும் நன்மதிப்பு மற்றும் இதன் மூலம் தொழிலில் ஏற்படும் முன்னேற்றங்கள் உள்ளிட்டவைகள் குறித்தும், வங்கியாளர்கள் கடன் விண்ணப்பங்களை விரைவாக பரிசீலனை செய்து தகுதியுடைய நபர்களுக்கு உரிய கடன்கள் விரைவாக கிடைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் பயனாளிகள் மற்றும் வங்கியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளாக எடுத்துரைத்தார்.

அதனைத் தொடர்ந்து ஆட்சியர் மாவட்டத்தில் உள்ள இந்தியன் வங்கியின் பல்வேறு கிளைகள் மூலம் 26 நபர்களுக்கு ரூ.2.54 கோடி மதிப்பீட்டில் கல்விக் கடன்களையும், மாற்றுத்திறனாளிகள் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சுய தொழில் புரிவதற்காக 16 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.15.73 இலட்சம் மதிப்பீட்டில் சுய தொழில் கடன்களையும், 21 நபர்களுக்கு ரூ.1.39 கோடி மதிப்பீட்டில் பிரதமர் வேலைவாய்ப்பு கடன்களையும், 16 நபர்கள் சுய தொழில் செய்து வாழ்வில் மேம்படும் வகையில் ரூ.68.18 இலட்சம் மதிப்பீட்டில் தாட்கோ சுய தொழில் கடன்களையும், நடைபாதை வியாபாரிகள் தங்களுக்கான சுய தொழில் செய்துகொள்ளும் வகையில் 10 நடைபாதை வியாபாரிகளுக்கு ரூ.1.40 இலட்சம் மதிப்பீட்டிலான சுய தொழில் கடன்களும், பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள் சுய தொழில் செய்ய ஏதுவாக 2 இளைஞர்களுக்கு ரூ.3.47 கோடி மதிப்பீட்டில் சுய தொழில் முனைவோர் கடன்களையும், மகளிர் சுய உதவிக் குழுவினர் சிறு குறு தொழில்கள் மேற்கொள்வதற்காக 2 மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.28 இலட்சம் மதிப்பீட்டில் சுய தொழில் கடன்களும்; என மொத்தம் 93 நபர்களுக்கு ரூ.8.53 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வகையான கடன்கள் பெறுவதற்கான ஆணைகள் மற்றும் காசோலைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இவ்விழாவில், இந்தியன் வங்கி மண்டல மேலாளர் சுசிலா பார்த்தசாரதி, மாவட்ட தொழில் மையம் துணை இயக்குநர் விஜயராணி, தாட்கோ மாவட்ட மேலாளர் க.இந்திரா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் டி.ஏ.சீனிவாசன், இந்தியன் வங்கி முதன்மை மேலாளர் விவேக், இந்தியன் வங்கி கிளை மேலாளர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.