திருவள்ளூர் அருகே 11 ஆம் வகுப்பு மாணவியை மிரட்டி உல்லாசமாக இருந்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது :

பதிவு:2022-04-21 12:15:27



திருவள்ளூர் அருகே 11 ஆம் வகுப்பு மாணவியை மிரட்டி உல்லாசமாக இருந்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது :

திருவள்ளூர் அருகே 11 ஆம் வகுப்பு மாணவியை மிரட்டி உல்லாசமாக இருந்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது :

திருவள்ளூர் ஏப் 21 : திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம், செஞ்சி கிராமம், மேலாண்டை தெருவை சேர்ந்த விவசாயி பரசுராமன் (63). இவருக்கு சொந்தமான வயலில் அதே கிராமத்தை சேர்ந்த 11 ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமி வயல் வேலைக்கு வந்து வயலில் பூ பறிக்கவும், கொய்யாக்காய் பறிக்கும் வேலையில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு அச்சிறுமி பரசுராமன் வயலில் கொய்யாக்காய் பறிக்க வந்தார். அப்போது அங்கிருந்த பரசுராமன் அவரிடம் ஆசை வார்த்தை கூறி அங்கிருந்த கொய்யா தோப்புக்குள் அழைத்துச் சென்று அவரை வற்புறுத்தி உடலுறவு கொண்டு உள்ளார். இதை யாரிடமும் சொல்லக்கூடாது என அவரை மிரட்டியுள்ளார்.

இதை தொடர்ந்து அவர் அந்த சிறுமியை மிரட்டி பலமுறை உல்லாசமாக இருந்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்த சிறுமி கர்ப்பம் ஆனார். இதுகுறித்து அவர் தனது பெற்றோரிடம் கூறினார். நடந்த சம்பவம் குறித்து சிறுமியின் தாய் திருவள்ளூரில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். திருவள்ளூர் டிஎஸ்பி சந்திரதாசன் உத்தரவின்பரில் இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரி வழக்குப்பதிவு செய்து பரசுராமனை கைது செய்தார். மேலும் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.