பதிவு:2023-01-18 12:00:06
மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் 106-வது பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் மேற்கு மாவட்ட துணை செயலாளர் கமாண்டோ பாஸ்கரன் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவியும மரியாதை
திருவள்ளூர் ஜன 18 : மறைந்த முன்னாள் முதல்வரும் அதிமுக நிறுவனத் தலைவருமான புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் 106-வது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அதன்படி திருவள்ளூர் மேற்கு மாவட்ட துணை செயலாளர் கமாண்டோ பாஸ்கரன் தலைமையில் திருவள்ளூரில் உள்ள எம்ஜிஆர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அதிமுகவின் ஆட்சிக் காலத்தில் பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது தமிழகத்தில் குடும்ப ஆட்சி தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. புரட்சித் தலைவர் , புரட்சித் தலைவி வழியில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி சிறப்பான ஆட்சி நடத்தினார்.
அதனைத்தொடர்ந்து தற்போது எதிர்க்கட்சித்தலைவராக சிறப்பாக செயலாற்றி வருவதாக மாவட்ட துணை செயலாளர் கமாண்டோ பாஸ்கரன் தெரிவித்தார். இதில் நிர்வாகிகள் நேசன், சுந்தரேசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அதே போல் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் 106-வது பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திருத்தணி-சித்தூர் பைபாஸ் சாலையில் நிறுவப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா புரட்சித் தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர்களின் திருவுருவ சிலைகளுக்கு முன்னாள் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினரும் கழக மாநில அமைப்பு செயலாளருமான திருத்தணி கோ. அரி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து சித்தூர் சாலையில் உள்ள முதியோர் இல்லம் மற்றும் முருகப்பா நகரில் இயங்கும் தொண்டு நிறுவனத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லம் உள்ளிட்ட பகுதிகளில் அன்னதானம் வழங்கி இனிப்புகள் வழங்கினார். அதேபோல் திருத்தணி அக்கைய சாலை பெரிய தெரு கமலா திரையரங்கம் இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் அவர் பிறந்த நாள் விழாவை இனிப்பு வழங்கியும் அன்னதானம் வழங்கியும் கொண்டாடினார்.
அனைத்து பகுதிகளிலும் எம்ஜிஆரின் திருவுருவப்பட்டதிற்கு மாலை அணிவித்து மலர் தூவி அதிமுகவினர் சிறப்பாக கொண்டாடினர் நிகழ்ச்சியில் தாலுக்கா கூட்டுறவு சங்க தலைவர் எம். ஜெயசேகர் பாபு நிர்வாகிகள் கேபிள் சுரேஷ். எஸ் .பழனி மைக்கேல் ராஜா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.