பதிவு:2023-01-18 12:41:48
திருவள்ளூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோயிலில் தை ப்ரம்மோத்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
திருவள்ளூர் ஜன 18 : 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலுக்கு திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாது சென்னை, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு முன்னோர்களுக்கு கோயில் அருகில் உள்ள குளக்கரையை சுற்றி தர்ப்பணம் செய்வார்கள்.
பிரசித்தி பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவள்ளூரில் உள்ள ஸ்ரீவைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலில் தை ப்ரம்மோத்ஸவ விழா இன்று (17-ம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று முதல் வரும் 10 நாட்கள் இந்த ப்ரம்மோத்சவ விழா நடைபெறுகிறது.
18-ம் புதன் கிழமை தேதி காலை 7.30 மணிக்கு ஹம்ஸ வாகனம் புறப்பாடும் 10 மணிக்கு திருமஞ்ஜனம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு ஸூர்ய ப்ரபை புறப்பாடும் நடைபெறுகிறது. 19-ம் வியாழன் கிழமை தேதி காலை 5 மணிக்கு கருட சேவை (கோபுர தரிசனம்) 7 மணிக்கு வீதி புறப்பாடும், மாலை 3 மணிக்கு திருமஞ்ஜனமும். இரவு 8 மணிக்கு ஹனுமநந்த வாகனம் புறப்பாடும் நடைபெறுகிறது. 20-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 7.30 மணிக்கு சேஷ வாகனமும், காலை 10 மணிக்கு திருமஞ்ஜனம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு சந்திர ப்ரபை புறப்பாடும் நடைபெறுகிறது.
21-ம் தேதி சனிக்கிழமை தை அமாவாசை ரத்னாங்கி சேவையும், மாலை 4 மணிக்கு நாச்சியார் திருக்கோலம் புறப்பாடும் இரவு 7 மணிக்கு திருமஞ்ஜனம் இரவு 9 மணிக்கு யாளி வாகனம் புறப்பாடும் நடைபெறுகிறது. 22-ந் தேதி ஞாயிற்றிகிழமை காலை 6 மணிக்கு சூர்ணாபிஷேகமும், 7.30 மணிக்கு வேணுகோபாலன் திருக்கோலமும், காலை 7.30 மணிக்கு வெள்ளிச்சப்பரம் நிகழ்ச்சியும், காலை 10 மணிக்கு திருமஞ்ஜனம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு யானை வாகனம் புறப்பாடும் நடைபெறுகிறது. 23-ந் தேதி திங்கட்கிழமை காலை 4.45 மணிக்கு (தனுர் லக்னம்) தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், காலை 7 மணிக்கு தேர் வீதி புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு தேரிலிருந்து எழுந்தருளி திருமஞ்ஜனம் மற்றும் இரவு 9 மணிக்கு கோயிலுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
24-ந் தேதி செவ்வாய்கிழமை காலை 9.30 மணிக்கு திருமஞ்ஜனமும், மாலை 3.30 மணிக்கு திருப்பாதம் சாடி திருமஞ்ஜனமும் நடைபெறுகிறது. இரவு 7.30 மணிக்கு குதிரை வாகனம் புறப்பாடும் நடைபெறுகிறது. 25-ந் தேதி புதன் கிழமைகாலை 5 மணிக்கு ஆள்மேல் பல்லக்கும், காலை 10 மணிக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு விஜயகோடி விமானம் புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 26-ந் தேதி வியாழன் கிழமை காலை 9.30 மணிக்கு திருமஞ்ஜனமும், மதியம் 12 மணிக்கு த்வாதச ஆராதனம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு வெட்டிவேர் சப்பரம் த்வஜ அவரோஹனம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.