ஊராட்சி பகுதிகளில் தேங்கியுள்ள குப்பைகளை முற்றிலும் அகற்றிடும் வகையில் குப்பைகளை அகற்றும் பணிகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆய்வு

பதிவு:2023-01-18 12:43:27



ஊராட்சி பகுதிகளில் தேங்கியுள்ள குப்பைகளை முற்றிலும் அகற்றிடும் வகையில் குப்பைகளை அகற்றும் பணிகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆய்வு

ஊராட்சி பகுதிகளில் தேங்கியுள்ள குப்பைகளை முற்றிலும் அகற்றிடும் வகையில் குப்பைகளை அகற்றும் பணிகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆய்வு

திருவள்ளூர் ஜன 18 : சென்னை மாநகராட்சிக்கு அருகில் உள்ள ஊராட்சி பகுதிகளில் ஒன்றாக அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அடையாளம்பட்டு பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளை முற்றிலும் அகற்றிடும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து, வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வானகரம் பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றும் பணிகளையும் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சென்னீர்குப்பம் ஆகிய பகுதிகளில் தேங்கியுள்ள குப்பைகளை; அகற்றிடும் பணிகளையும் ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேற்கண்ட அடையாளம்பட்டு, வானகரம் மற்றும் சென்னீர்குப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள குப்பைகளை அகற்றி அங்குள்ள குப்பைகளை பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கொடுங்கையூர் குப்பை கிடங்கிற்கு வாகனம் மூலம் கொண்டு செல்லும் பணிகளை விரைந்து முடித்து அப்பகுதிகளை சுத்தமான மற்றும் பயன்பாட்டிற்க்குரிய பகுதியாக மாற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட ஊராட்சி மற்றும் நகராட்சித்துறையைச் சேர்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். இதுவரையில், சுமார் 2000 டன் குப்பைகளை அப்பகுதிகளிலிருந்து அகற்றப்பட்டுள்ளதாக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாய்வுகளில், உதவி ஆட்சியர் (பயிற்சி) கேத்ரின் சரண்யா,ஊராட்சிகள் உதவி இயக்குனர் ரூபேஷ் குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் ராஜவேல்,திருவேற்காடு அறநிலை துறை துணை ஆணையர் ஜெயப்பிரியா, வில்லிவாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிடரேடிக் அருண்குமார், வெங்கடேசன், பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அலுவலர் ராம்குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் சரவணன் (அடையாளம்பட்டு), ஜமுனா (வானகரம்) மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.