பதிவு:2023-01-19 16:54:34
பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சார்பில் வழங்கும் கடன் திட்டங்கள் குறித்த லோன் மேலா : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :
திருவள்ளூர் ஜன 19 : பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சார்பில் வழங்கும் கடன் திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :
:
பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சார்பில் வழங்கும் கடன் திட்டங்களில் கடன் பெற பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவராக இருத்தல் வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 60 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.
:
பொதுகால கடன் திட்டம், தனிநபர் கடன் திட்டம் மூலம் அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாய் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 6 சதவிகிதத்திலிருந்து 8 சதவிகிதம் வரை. பெண்களுக்கான புதிய பொற்காலக் கடன் திட்டத்தின்கீழ் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 5 சதவிகிதம்.
சிறு கடன் வழங்கும் திட்டத்தின்கீழ் சுய உதவி குழு மகளிர் உறுப்பினர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரையும் குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரையும் வழங்கப்படுகிறது . ஆண்டு வட்டி விகிதம் 4 சதவிகிதம். மகளிர் சுய உதவி குழு தொடங்கி ஆறு மாதங்கள் பூர்த்தியாகியிருக்க வேண்டும் திட்ட அலுவலரால் (மகளிர் திட்டம்) தரம் செய்யப்பட்டிருக்க வேண்டும் ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவர்.
:
சிறு கடன் வழங்கும் திட்டத்தின்கீழ் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக உள்ள ஆடவருக்கு கடன் தொகை ரூ.1 லட்சம் வரையும் ஒரு குழுவிற்கு அதிகபட்ச கடன் தொகை ரூ.15 லட்சம் வரையும் வழங்கப்படுகிறது ஆண்டு வட்டி விகிதம் 5 சதவிகிதம். ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர் அனுமதிக்கப்படுவார்கள்.ஒரு பயனளிக்கு ரூ.30 ஆயிரம் வீதம் 2 கறவை மாடுகள் வாங்க ரூ.60 ஆயிரம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது ஆண்டு வட்டி விகிதம் 6 சதவகிதம்.
:
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் அனைத்து கூட்டுறவு வங்கி கிளைகளிலும் கடன் விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கியில் ஒப்படைக்க வேண்டும்.சிறுபான்மையினர்களுக்கு - தனிநபர் கடன் வழங்க திட்டம் 1-ன் கீழ் பயன்பெற விரும்புவோரின் குடும்ப ஆண்டு வருமானம் நகர்புறத்தில் வசிப்பவராக இருப்பின் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்திற்கு மேற்படாமலும், கிராமப்புறத்தில் வசிப்பவராக இருப்பின் ரூ.98 ஆயிரத்திற்கு மேற்படாமலும் இருக்க வேண்டும்.
:
திட்டம் 2-ன் கீழ் பயன்பெற விரும்புவோரின் குடும்ப ஆண்டு வருமானம்; ரூ.8 லட்சத்திற்கு மிகாமலும் இருக்க வேண்டும். திட்டம்-1ன் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6 சதவிகிதம் வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.20 லட்சமும் திட்டம்-2ன் கீழ் ஆண்களுக்கு 8 சதவிகிதம் வட்டி, பெண்களுக்கு 6 சதவிகித வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.30 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.
:
கைவினை கலைஞர்களுக்கான கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் கைவினை கலைஞர்களில் ஆண்களுக்கு 5 சதவிகிதமும் பெண்களுக்கு 4 சதவிகித வட்டி விகிதத்திலும் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. சுய உதவிக் குழுக்களுக்கான கடன் வழங்கும் திட்டத்தின் கீழ்சிறுபான்மையின பெண்கள், ஆண்கள் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கப்படுகிறது. இக்குழு குறைந்த பட்சம் ஆறு மாதங்கள் சேமித்தல் மற்றும் உள் கடன் போன்றவற்றில் ஈடுபட்டு இருக்க வேண்டும். சுய உதவி குழுவின் 60 சதவிகித அங்கத்தினர்கள் சிறுபான்மையினராக அவசியம் இருக்க வேண்டும். ஏனைய 40 சதவிகித உறுப்பினர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப் பட்டோர், ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றோர் இடம் பெற்றிருக்கலாம். குழு உறுப்பினர் ஒருவருக்கு அதிக பட்சமாக ரூ.1 லட்சம் கடனுதவி 7 சதவிகித வட்டி விகிதத்தில் வழங்கப்படும்.
:
கல்விக் கடன் வழங்கும் திட்டத்தில் சிறுபான்மையின மாணவ-மாணவியர்கள் அரசால் அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை, தொழிற்கல்வி, தொழில்நுட்ப கல்வி பயில்வோர்களுக்கு அதிகபட்சமாக திட்டம்-1ன் கீழ் ரூ.20 லட்சம் வரையில் 3 சதவிகித வட்டி விகிதத்திலும், திட்டம் 2-ன் கீழ் மாணவர்களுக்கு 8 சதவிகித வட்டி விகிதத்திலும் மாணவியர்களுக்கு 5 சதவீத வட்டி விகிதத்தில் ரூ.30 லட்சம் வரை கல்விக்கடன் உதவி வழங்கப்படுகிறது.
:
மேலும், பிரதி மாதம் முதல் மற்றும் மூன்றாம் வார வெள்ளிக்கிழமைகளில் மத்திய கூட்டுறவு வங்கி கிளை அலுவலகத்தின் மூலமாக லோன் மேலா நடத்தப்படும் என திருவள்ளூர் மாவட்ட மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வரகீஸ் தெரிவித்துள்ளார்.