பதிவு:2023-01-19 16:56:19
திருவள்ளூர் அடுத்த மப்பேட்டில் உள்ள அருள்மிகு ஸ்ரீபுஷ்பகுஜாம்பாள் சமேத ஸ்ரீசிங்கீஸ்வரர் ஸ்வாமி திருக்கோயிலில் மஹா கும்பாபிஷேகம் : ஏராளமான பக்தர்கள் பக்தி பரவத்துடன் கலந்து கொண்டனர் :
திருவள்ளூர் ஜன 19 : திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட மப்பேடு கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீபுஷ்பகுஜாம்பாள் சமேத ஸ்ரீசிங்கீஸ்வரர் ஸ்வாமி திருக்கோயிலில் சிவாகம முறைப்படி மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கிராம தேவதை அபிஷேகமும், அஷ்டா அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, தன பூஜை, கணபதி ஹோமம், லஷ்மி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனையும் மாலை பூமி தேவி பிரார்த்தைனை, மிருச்சங்கிரஹணம், மண்டுகபத வாஸ்து சாந்தி, பிரவேச பலி மற்றும் தீபாராதனையும் நடைபெற்றது.
:
அதனைத்தொடர்ந்து சாந்தி ஹோமம், திசா ஹோமம், மூர்த்தி ஹோமம்,சமிதா ஹோமம்,வடுக பூஜை, கனனியா பூஜை,சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, கோ பூஜை, அஸ்வ பூஜை, யாக அலங்காரம் தீபாராதனையும், வேதபாராயணம், கும்பலங்காரம், ரித்விக் ஆச்சார்யார் ரக் ஷா பந்தனம், யாகசாலை பிரவேதம், முதல் கால யாக பூஜை, விசேஷ் திரவ்ய ஹோமத்துடன் தீபாராதனையும் நடைபெற்றது.
:
அதனைத் தொடர்ந்து வேத பாராயணம், 4-ம் கால யாக பூஜை, மஹா பூர்ணாஹூதி, யாத்ரா தானம் கடம் புறப்படுதல் நிகழ்ச்சியும், அதனையடுத்து இராஜகோபுரம் மற்றும் அனைத்து விமானங்களுக்கும் புனித நீரை ஊற்ற கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.பின்னர் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.இதில் ஏராளமான பக்தர்கள் பக்தி பரவத்துடன் கலந்து கொண்டு சுவாமியின் அருளை பெற்றனர்.மேலும் ஸ்ரீபுஷ்ய குஜாம்பாள் சமேத அருள்மிகு ஸ்ரீசிங்கீஸ்வரர் சுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம்,தீபாராதனையும் நடைபெற்றது.