திருவள்ளூர் அடுத்த மணவூரில் அனுமதியின்றி பட்டாசு விற்பனையில் ஈடுபட்டவர் கைது :

பதிவு:2023-01-19 16:59:54



திருவள்ளூர் அடுத்த மணவூரில் அனுமதியின்றி பட்டாசு விற்பனையில் ஈடுபட்டவர் கைது :

திருவள்ளூர் அடுத்த மணவூரில் அனுமதியின்றி பட்டாசு விற்பனையில் ஈடுபட்டவர் கைது :

திருவள்ளூர் ஜன 19 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த திருவாலங்காடு ஊராட்சி பராசக்தி நகர், மணவூர் சாலையில் வசிப்பவர் ஞானேஸ்வரன். இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு கடை அமைத்து விற்பனை செய்ய உரிமம் பெற்றார். :

30 நாட்கள் விற்பனை செய்ய வருவாய் துறையினர் உரிமம் வழங்கிய நிலையில் தொடர்ந்து மளிகை கடையில் வைத்து உரிமமின்றி பட்டாசு விற்பனை செய்வதாக திருவாலங்காடு போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து திருவாலங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையிலான போலீசார் அவர் கடையில் சோதனை செய்தனர். :

அதில் 2 லட்ச ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து பட்டாசை பறிமுதல் செய்த போலீசார் உரிமம் இன்றி பட்டாசை பதுக்கி விற்பனை செய்த ஞானேஸ்வரனை கைது செய்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.