பதிவு:2023-01-19 17:02:01
திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கத்தில் கிராம மக்களிடையே நல்லுறவு ஒற்றுமையை மேம்படுத்தும் விதமாக பாரிவேட்டை திருவிழா : ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் :
திருவள்ளூர் ஜன 19 : திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கத்தில் ஆண்டுதோறும் காணும் பொங்கலை முன்னிட்டு பாரிவேட்டை திருவிழா நடைபெறுவது வழக்கம். கிராம மக்களிடையே நல்லுறவை மேம்படுத்தும் விதமாகவும் ஒற்றுமையை மேம்படுத்தும் விதமாகவும் இந்த பாரிவேட்டை திருவிழா நடைபெறும்.
:
இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக பேரம்பாக்கத்தில் பாரிவேட்டை திருவிழா நடத்தாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த ஆண்டு தொற்று பாதிப்பு இல்லாத காரணத்தால் பாரிவேட்டை திருவிழா நடைபெற்றது.
:
அப்போது பேரம்பாக்கம் கிராமத்திலிருந்து காமாட்சி அம்மன் சமேத சோளீஸ்வரர் , வீரபத்திரர்,களாம்பாக்கம் கிராமத்திலிருந்து திருநாகேஸ்வரர், நரசிங்கபுரம் கிராமத்திலிருந்து முருகர், சிவபுரம் கிராமத்திலிருந்து குறுந்த விநாயகர், மாரி மங்கலம் கிராமத்திலிருந்து சிவமாரி நாராயணி, வள்ளலார் உட்பட 9 கிராமங்களில் இருந்து டிராக்டர்களில் வண்ண வண்ண மலர்களாலும் மின்விளக்குகளாலும் சுவாமி சிலைகள் அலங்கரிக்கப்பட்டு பேரம்பாக்கம் கிராமத்தில் உள்ள கன்னியம்மன் கோவில் அருகே உள்ள திடலில் ஒன்று கூடினார்கள்.
:
அதனைத் தொடர்ந்து சுவாமிகள் முன்னும் பின்னும் அசைந்தாடி பாரிவேட்டை திருவிழா வெகு விமசையாக நடைபெற்றது. இதில் பேரம்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
:
அதை தொடர்ந்து அனைத்து சுவாமி சிலைகளும் ஊர்வலமாக கொண்டு வந்து பேரம்பாக்கம் பஜார் வீதியில் ஒரே வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமிகளுக்கு கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்தனர். ஒவ்வொரு கிராம சுவாமிகளுக்கும் பொதுமக்கள் தனித்தனியாக வழிபாடு செய்தனர். அதை தொடர்ந்து பாரிவேட்டை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
:
கொரோனா தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பேரம்பாக்கத்தில் நடைபெற்ற பாரிவேட்டை திருவிழாவில் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.இந்த பாரிவேட்டை திருவிழாவிற்காக திருவள்ளூர் மாவட்ட எஸ்பி மா. சிபாஸ் கல்யாண் உத்தரவின் பேரில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.