பதிவு:2023-01-21 17:39:27
ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியத்தில் பம்பு செட்டு அல்லது மின் மோட்டாருடன் நுண்ணீர்ப் பாசன வசதி அமைத்துத் தருதல் திட்டத்தில் பயன்பெறலாம் : மாவட்ட ஆட்சியர் தகவல் :
ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியத்தில் பம்பு செட்டு அல்லது மின் மோட்டாருடன் நுண்ணீர்ப் பாசன வசதி அமைத்துத் தருதல் திட்டத்தில் பயன்பெறலாம் : மாவட்ட ஆட்சியர் தகவல் :
திருவள்ளூர் ஜன 20 : தமிழ்நாட்டில் பாசன நீர் ஆதாரங்களை புதியதாக உருவாக்கி அதிக பரப்பில் சாகுபடி மேற்கொண்டு விவசாயிகள் அதிக விளைச்சல் பெறவேண்டும் என்ற நோக்கத்துடன் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.ஆதிதிராவிட பழங்குடியின விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ஆழ்துளை அல்லது குழாய்கிணறுகள் அமைத்து 2021-22ஆம் ஆண்டில் ரூ.12 கோடி செலவில் மின்மோட்டாருடன் நுண்ணீர் பாசனவசதி அமைத்துத்தரப்படும் என வேளாண்துறை அமைச்சர் அவர்கள் பேரவையில் அறிவித்தார்.
அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் பாசனநீர் வசதி இல்லாத இடங்களில் 200 சிறுஇ குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் நிலத்தடி நீர் பாதுகாப்பான குறு வட்டங்களில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் செயல்படுத்திட தமிழ்நாடு அரசு 09.03.2022 அன்று ஆணைபிறப்பித்து பணிகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் உள்ள நிலத்தடி நீர் பாதுகாப்பாக உள்ள குறுவட்டங்களில் கூடுதலாக 200 ஆதிதிராவிட,பழங்குடியின பிரிவினைச் சார்ந்த சிறு,குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் இத்திட்டத்தினை செயல்படுத்த 07.12.2022 அன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையினரால் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2021-22ம் ஆண்டு பணி மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்ட 80 பஞ்சாயத்து கிராமங்களில் உள்ள பாதுகாப்பான 20 குறு வட்டங்களைச்சேர்ந்த 40 பஞ்சாயத்து கிராங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. மேலும் திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 10 எண்கள் ரூ.60 இலட்சம் மானியத்தில் செயல்படுத்தப்படவுள்ளது.
மேலும் இத்திட்டத்தின் பயனாளிகளுக்கு உரிய வருவாய்துறையின் மூலம் வழங்கப்பட்ட சாதிசான்று பெறப்பட வேண்டும். சாத்தியமுள்ள இடங்களில் சூரிய சக்தி மூலம் இயக்கப்படும் பம்புசெட் (அதிகபட்சம் 10 குதிரைத் திறன் வரை) அமைத்திட வேண்டும்.இத்திட்டத்தின் கீழ் இடத்திற்கு ஏற்றவாறு,குழாய் கிணறு அல்லது ஆழ்துளைக் கிணறு அமைத்தல்,நீரினை இறைப்பதற்கு மின்சார சக்தி மூலம் அல்லது சூரிய சக்தி மூலம் இயங்கக் கூடிய பம்பு செட்டுகள் நிறுவுதல்இ பாசன நீரிணை வீணாக்காமல் சாகுபடி செய்யப்படும் வயலுக்கு அருகில் கொண்டு செல்வதற்கு பாசன நீர் குழாய்கள் நிறுவுதல் மற்றும் நுண்ணீர் பாசன அமைப்புகளை நிறுவுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இத்திட்டம் “பிரதம மந்திரி நீர்பாசனத் திட்டம் – ஒவ்வொரு வயலுக்கும் நீர்நிலத்தடி நிர்ப்பாசனத் திட்டத்தின்“ வழிகாட்டு நெறிமுறைகளின்படி செயல்படுத்தப்படும்.அரசினால் நிர்ணயிக்கப்பட்ட ஆழத்திற்கும் அதிகமாக கிணறு அமைக்க வேண்டும் என்றாலோ அல்லது கூடுதல் குதிரைத்திறன் கொண்ட பம்பு செட்டுகள் நிறுவவேண்டும் என்றாலோ, அதற்கான கூடுதல் செலவினை சம்பந்தப்பட்ட விவசாயிகளே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
சிறு மற்றும் குறு விவசாயிகளாக உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் பயன்பெறும் வகையில்,பாசன அமைப்புகளை உருவாக்கி தங்களது நிலத்தில் சாகுபடியினை மேற்கொள்ள வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ள இத்திட்டத்தினை வேளாண் பெருமக்கள் பயன்படுத்திட சம்பந்தப்பட்ட பாதுகாப்பான குறு வட்டங்களில் உள்ள பயனாளிகள் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் செயற்பொறியாளர் மற்றும் உதவி செயற்பொறியாளர் திருவள்ளூர்,திருத்தணி மற்றும் பொன்னேரி அலுவலகங்களை அணுகலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.