திருவள்ளூர் ரோட்டரி சங்கம் சார்பாக சாலை பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு சாலை விதிகளை கடைபிடிப்பவர்களுக்கு பரிசுகள் :

பதிவு:2023-01-21 17:44:12

திருவள்ளூர் ரோட்டரி சங்கம் சார்பாக சாலை பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு சாலை விதிகளை கடைபிடிப்பவர்களுக்கு பரிசுகள் :

திருவள்ளூர் ரோட்டரி சங்கம் சார்பாக சாலை பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு சாலை விதிகளை கடைபிடிப்பவர்களுக்கு பரிசுகள் :

திருவள்ளூர் ஜன 20 : திருவள்ளூர் ரோட்டரி சங்கம் சார்பாக சாலை பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு இரு சக்கர வாகனங்களில் பயணிப்போர் பாதுகாப்புடன் தலைக்கவசம் அணிந்து சாலை விதிகளை கடைபிடிக்கும் அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்கும் விதமாக பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி திருவள்ளூர் காமராஜர் சிலை அருகில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத் தலைவர் ரூப்குமார் தலைமை வகித்தார். திருவள்ளூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் சிவக்குமார், லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் திருவள்ளூர் ஞான வித்யாலயா பள்ளி மாணவர்கள் பேண்ட் இசைத்து சாலை பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்கும்படி துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

திருவள்ளூர் ரோட்டரி சங்க தலைவர் ரூப் குமார், பொருளாளர் ஆறுமுகம், சங்கப் பணி இயக்குனர் தனசேகரன், சாலை பாதுகாப்பு இயக்குனர் உதயகுமார், முன்னாள் தலைவர்கள் கோல்டு கோபால், குமரன், டி.ஆர்.எஸ்.சந்துரு, வருங்கால தலைவர் திராவிட மணி மற்றும் உறுப்பினர்கள் சுரேஷ், செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டு சாலை விதிகளை கடைபிடிப்பவர்களுக்கு சிறப்பு பரிசினை வழங்கினர்.