பொன்னேரியில் பள்ளிக் கல்வித் துறை சார்பாக மாணவ,மாணவர்களுக்கு போதை பொருள் ஒழிப்பு குறித்து "Collector@School" என்ற சமூக விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி :

பதிவு:2023-01-21 18:23:06



பொன்னேரியில் பள்ளிக் கல்வித் துறை சார்பாக மாணவ,மாணவர்களுக்கு போதை பொருள் ஒழிப்பு குறித்து "Collector@School" என்ற சமூக விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி :

பொன்னேரியில் பள்ளிக் கல்வித் துறை சார்பாக மாணவ,மாணவர்களுக்கு போதை பொருள் ஒழிப்பு குறித்து

திருவள்ளூர் ஜன 20 : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை சார்பாக 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் நடைபெற்ற "Collector@School" என்ற சமூக விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்துகொண்டு, மாணவர்களோடு கலந்துரையாடி ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை வழங்கி பேசினார். இந்த பள்ளியில் மிகச் சிறப்பாக "Collector@School" நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளீர்கள். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததற்கான காரணம் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தை மாணவர்களிடையே கொண்டு சேர்ப்பதாகும். குறிப்பாக மாணவ, மாணவியர்களிடம் பரவி வரும் கஞ்சா உள்ளிட்ட பல்வேறு போதைப்பொருட்களுக்கு எதிராக டிரைவ் அகேயின்ஸ்ட் டிரக்ஸ் என்ற பேரில் தமிழகம் முழுவதுமாக ஒரு வலிமையான விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. நாம் எடுக்கும் முடிவுகள் தான் நம்முடைய வாழ்க்கையை தீர்மானிக்கிறது. அதுபோன்று நாம் எடுக்கும் முடிவு தான் போதைப்பொருட்களை பயன்படுத்துவதும், பயன்படுத்தாமல் விடுவதும். மேலும், நம் கிராமத்தில் வேறு யாரேனும் இளைஞர்கள் இந்த பழக்கத்திற்கு அடிமையானால் அவர்களுக்கு நல்ல பழக்க வழக்கங்களை ஏற்படுத்தி தருவதால் அவர்களால் நல்ல முடிவுகள் எடுப்பதன் மூலம் அவர்களுக்கு வாழ்வில் நன்மை மட்டுமே அடைய வாய்ப்புள்ளது. இதனை கருத்தில் கொண்டு அனைவரும் செயல்பட வேண்டும். எனவே, சரியான நேரத்தில் சரியான முடிவுகள் எடுப்பவர்கள் வாழ்க்கையில் நல்ல முறையில் வெற்றியடைவார்கள். இந்த வயதில் இருக்கும் மாணவர்களாகிய நீங்கள் எடுக்கும் இரண்டு முக்கியமான முடிவுகளில் ஒன்று போதைப்பொருட்களுக்கு நான் எக்காரணத்தாலும் ஆளாக மாட்டேன், போதைப்பொருட்களை எக்காரணத்தாலும் பயன்படுத்த மாட்டேன் என்ற முடிவுகள் கட்டாயமாக எடுக்கப்பட வேண்டும். இரண்டாவது, நான் சரியான முறையில் பள்ளி, கல்லூரிகளில் பாடங்களை படிப்பேன். என்னுடைய வாழ்க்கையில் முன்னேறுவதற்கு அதற்காக கடினமாக உழைப்பேன் என்பதாகும். இந்த இரண்டு முடிவுகளை சரியாக எடுத்தால் நம் வாழ்க்கை நிச்சயம் வெற்றிகரமாக இருக்கும் என்று ஆட்சியர் கூறினார். அதனைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித் துறை சார்பாக நடைபெற்ற "Collector@School" என்ற சமூக விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் 9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். முன்னதாக, இந்நிகழ்வில் 9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் நடைபெற்ற "Collector@School" என்ற சமூக விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாணவர்களின் சாதனைகள் மற்றும் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்து பார்வையிட்டு, மாணவர்களோடு கலந்துரையாடினார். இதில் சார் ஆட்சியர் (பொன்னேரி) ஐஸ்வர்யா ராமநாதன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் த.இராமன், பொன்னேரி காவல் துணை கண்காணிப்பாளர் கிரியா சக்தி, பொன்னேரி நகர மன்ற தலைவர் கே.பரிமளம் விஸ்வநாதன், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பூபாலன், ஒருங்கிணைப்பாளர் பவானி, மனநல மருத்துவர்கள் அனுரத்னா, அசோகன், தலைமையாசிரியர் ராமமூர்த்தி, ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.