திருவாலங்காட்டில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 106 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் : அதிமுக ஆட்சியில் 35 லட்சம் பேருக்கு வழங்கப்பட்ட ஓய்வூதியம் 15 லட்சமாக குறைத்து வழங்குவதாகவும் முன்னாள் அமைச்சர் பி வி ரமணா குற்றச்சாட்டு :

பதிவு:2023-01-21 18:28:51

திருவள்ளூர் ஜன 21 : திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவாலங்காட்டில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 106 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான பி வி ரமணா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது திண்டுக்கல் இடைத்தேர்தலில் அதிமுக பெற்ற வெற்றி புரட்சி தலைவர் எம்ஜிஆர் அமைந்தது போல வருகிற பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் நடைபெறும் இடைத்தேர்தல் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தீர்ப்பு முனையாக அமையும் என்றும், ஈரோடு இடைத்தேர்தலில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்பதாலேயே காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார். அதிமுக ஆட்சி காலத்தில் காவல்துறை அதிகாரிகள் அரசு ஊழியர்கள் அதிகாரிகள் பயப்படாமல் வேலை பார்த்த நிலையில் தற்போது திமுகவினர் அதிகாரிகளை தாக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது.

ஆளுநர் ஒருவரை திமுக பேச்சாளர் தரக்குறைவான வார்த்தைகளால் பேசுவதை கண்டிக்காத திமுக தலைமையால் சாதாரண பொது மக்களுக்கு மோசமான நிலைமை ஏற்படுவதாகவும் தெரிவித்தார். அதிமுக ஆட்சி காலத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் 37 ஆயிரம் பேருக்கு முதியோர் உதவித் தொகை வழங்கி வந்த நிலையில் திமுக ஆட்சியில் 20 ஆயிரம் பேருக்கு முதியோர் உதவி தொகை நிறுத்தப்பட்ட கொடுமையும் நிகழ்ந்துள்ளதாகவும், உலகம் முழுவதும் அதிமுக ஆட்சியில் 35 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை நீ வந்த நிலையில் தற்போது 15 லட்சம் பேருக்கு மட்டுமே இந்த முதியோர் உதவி தொகை வழங்குவதாகவும் குற்றம் சாட்டினார்.

அதிமுக அரசு பொது மக்களுக்காக செயல்பட்டது. திமுக அரசு குடும்பத்திற்காக மட்டுமே நடத்தப்படுவதாகவும், சினிமா துறை மூலம் தமிழகத்தையே கபளிகரம் செய்து விட்டதாகவும் இந்த இரண்டு ஆண்டு கால திமுக ஆட்சியில் 50 ஆயிரம் கோடியை சுரண்டியதாகவும் முன்னாள் அமைச்சர் பி வி ரமணா பகிரங்கமாக குற்றம் சாட்டினார். நிகழ்ச்சியின் முடிவில் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 106-வது பிறந்த நாளை முன்னிட்டுஆயிரம் பேருக்கு இலவச சேவை வழங்கினார். இதில் முன்னாள் எம்பி வேணுகோபால் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.