பதிவு:2022-04-21 14:26:16
தமிழகத்தில் வரும் 25-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
சென்னை: தமிழகத்தில் வரும் 25-ம் தேதி வரை 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக பெருஞ்சாணி, புத்தன் அணை பகுதியில் தலா 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. நாளை புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வரும் 23-ம் தேதி உள்தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யலாம் என தெரிவித்துள்ளது. வரும் 24-ம் தேதி வட தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறையில் லோசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது. 24-ம் தேதி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 24-ம் தேதி வரை மீனவர்களுக்கு ஏதும் எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.