பாடியநல்லூர் சோதனை சாவடியில் அடுத்தடுத்த வாகனங்களை சோதனை செய்ததில் ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 6 டன் ரேஷன் அரிசி பறிமுதல் : மூன்று பேர் கைது. உரிமையாளருக்கு வலை வீச்சு

பதிவு:2023-01-29 22:49:49



பாடியநல்லூர் சோதனை சாவடியில் அடுத்தடுத்த வாகனங்களை சோதனை செய்ததில் ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 6 டன் ரேஷன் அரிசி பறிமுதல் : மூன்று பேர் கைது. உரிமையாளருக்கு வலை வீச்சு

பாடியநல்லூர் சோதனை சாவடியில் அடுத்தடுத்த வாகனங்களை சோதனை செய்ததில் ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 6 டன் ரேஷன் அரிசி பறிமுதல் : மூன்று பேர் கைது. உரிமையாளருக்கு வலை வீச்சு

திருவள்ளூர் ஜன 28 : திருவள்ளுர் மாவட்டத்தில் தமிழக பொது விநியோக திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் பொருட்கள் கடத்தலை தடுக்கும் பொருட்டு, குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு காவல்துறை கூடுதல் இயக்குநர் அருண் உத்தரவின் பேரில், எஸ்பி கீதா மேற்பார்வையில், டிஎஸ்பி நந்தகுமார் வழிகாட்டுதலின்படி, காவல் ஆய்வாளர் சதீஷ் மற்றும் போலீசார் பாடியநல்லுார் சுங்கச்சாவடி அருகில் வாகன ஈடுபட்டனர்

அப்போது அந்த வழியாக வந்த டிஎன்-05 சிபி-8715 என்ற நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தியபோது, வாகனத்தை ஓட்டி வந்த நபர் வாகனத்தை தூரத்தில் நிறுத்தி, இறங்கி ஓட முயன்றார். இதனையடுத்து போலீசார் விரைந்து சென்று தப்பி ஓடியவரை பிடித்து மேற்கொண்ட விசாரணையில் அவர் வியாசர்பாடியை சேர்ந்த முகமது காஜா மைதீன்(37)என்பது தெரியவந்தது. இதனையடுத்து வாகனத்தை சோதனை செய்ததில், அதில் சுமார் 50 கிலோ எடை கொண்ட 60 மூட்டைகளில் மொத்தம் 3 டன் தமிழக பொது விநியோகத்திட்ட ரேசன் அரிசி இருப்பது தெரியவந்தது..

இதனையடுத்து அரிசி கடத்தலில் ஈடுபட்டதாக அரிசி உரிமையாளர் தௌலத் நிஷா மற்றும் வாகன ஓட்டுநர் முகமது காஜா மைதீன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து, பிடிப்பட்ட வாகன ஓட்டுநர் முகமது காஜா மைதீன் என்பவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதில் தலைமறைவான உரிமையாளர் தௌலத் நிஷாவை தேடி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட ரேசன் அரிசியை திருவள்ளூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.

அதேபோல் அடுத்ததாக வந்த வந்த டிஎன்05சிஎப் 6941 TN-05 CF- 6941 என்ற 4 சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது வாகனத்தை ஓட்டி வந்த நபர் மற்றும் வாகனத்தில் இருந்த மற்றொரு நபர் ஆகிய இருவரும் வாகனத்தில் இருந்து இறங்கி தப்பி ஓட முயன்றனர். அவர்களைப் பிடித்து மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் செங்குன்றம் பகுதியை சேர்ந்த யாகூப் ஷெரிப்(60). மற்றும் பீகார் மாநிலத்தை சேர்ந்த நூர் ஆலம் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து வாகனத்தை சோதனை செய்ததில், அதில் சுமார் 50 கிலோ எடைக் கொண்ட 60 மூட்டைகளில் மொத்தம் 3,000 கிலோ தமிழக பொது விநியோகத்திட்ட ரேசன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அரிசி கடத்தலில் ஈடுபட்ட அரிசி உரிமையாளர் தௌலத் நிஷா, வாகன ஓட்டுநர் நுார் ஆலம், யாகூப் ஷெரிப் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிடிப்பட்ட வாகன ஓட்டுநர் நுார் ஆலம்,மற்றும் யாகூப் ஷெரிப் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

வாகன சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட 6 டன் ரேசன் அரிசியையும் 2 வாகனங்கள் மூலம் கடத்தலில் ஈடுபட்ட உரிமையாளர் தௌலத் நிஷா என்பவரை தேடி வருகின்றனர். மேலும் கைப்பற்றப்பட்ட ரேசன் அரிசியை திருவள்ளூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.பாடியநல்லூர் சோதனை சாவடியில் அடுத்தடுத்த வாகனங்களை சோதனை செய்ததில் 6 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்ததோடு மூன்று பேரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.