பதிவு:2023-01-30 23:00:58
திருவேற்காடு நகராட்சியில் சிறுதானிய உணவு திருவிழாவில் அமைக்கப்பட்டுள்ள சுமார் 80 அரங்குகள் : மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டார்
திருவள்ளூர் ஜன 30 : திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு நகராட்சி, சிவன் கோயில் தெரு மைதானத்தில் சிறுதானிய உணவு திருவிழாவில் அமைக்கப்பட்டுள்ள சுமார் 80 அரங்குகளை மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டு. மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் பல்வேறு சிறுதானிய உணவுகளை சுவைத்து உணவருந்தினார்.
அதனைத் தொடர்ந்து, இத்திருவிழாவில் இரண்டு உலக சாதைனைகள் நிகழ்த்தப்பட்டது,. அதில் முதலாவதாக அரசுப் பள்ளிகளைச் சேர்த்த 300 மாணவர்கள் இணைந்து சிறுதானியங்களைக் கொண்டு திருவள்ளுர் மாவட்ட வரைபடம், உணவு பாதுகாப்பு இலச்சினைகளை 120 சதுர அடியில் உலகின் மிகப்பெரிய சிறுதானிய ஓவியமாக உருவாக்கியதை புதிய உலக சாதனையாக TRIUMPH WORLD RECORDS என்ற நிறுவனத்தினர் அங்கீகரித்து அதற்கான சான்றிதழ் மற்றும் பதக்கங்களையும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சரிடம் வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து, இவ்விழாவில் இரண்டாவதாக “நாளொரு சிறுதானிய சமையல்" என்ற தலைப்பில், சமையல் கலைஞர்கள் பங்கேற்று, நேரடி சமையல் செயல்முறை விளக்கங்களுடன் கூடிய குதிரைவாலி கிச்சடி, வரகு மல்லி பொங்கல், கேழ்வரகு கேக், கம்பு கட்லெட் உள்ளிட்ட 365 வகையான சிறுதானிய உணவு வகைகளை, சமையல் வல்லுனர்கள் நேரடியாக பொது மக்களுக்கு செய்துகாட்டி காட்சிப்படுத்தப்பட்டதை WORLD RECORDS UNION என்ற நிறுவனம் புதிய உலக சாதனையாக அங்கீகரித்து அதற்கான சான்றிதழ் மற்றும் கேடயங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சரிடம் வழங்கினர். அந்த இரண்டு உலக சாதனை நிகழ்வுகளையும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர்; அவர்கள் நேரடியாக பார்வையிட்டு, அவ்வுலக நிகழ்வில் பங்குபெற்ற அனைவரையும் பாராட்டினார்.
இச்சிறுதானிய உணவு திருவிழாவில், மதுரவாயில் சட்டமன்ற உறுப்பினர் க.கணபதி, உணவு பாதுகாப்புத்துறை இயக்குனர் மற்றும் கூடுதல் ஆணையர் தி.அ.தேவ பார்த்தசாரதி, மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ம.ஜெகதீஷ் சந்திர போஸ், திருவேற்காடு நகர்மன்ற தலைவர் என்.ஈ.கே. மூர்த்தி, துணைத் தலைவர் ஆனந்தி ரமேஷ், ஆணையர் எச்.ரமேஷ், அயப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் துரை வீரமணி, உள்ளாட்சி பிரதிநிதிகள், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் அரச அலுவலர்கள் கலந்து கொண்டனர்.