மேல்நல்லாத்தூர் பகுதியில் நள்ளிரவில் முகமூடி அணிந்த மர்ம கும்பல் ஜேசிபியுடன் வந்து கட்டிடத்தை இடுத்து தள்ளியதால் பரபரப்பு : பாதிக்கப்பட்டவர் புகார்

பதிவு:2023-01-30 23:03:02

திருவள்ளூர் ஜன 30 : திருவள்ளூர் அருகே மேல்நல்லாத்தூர் பகுதியில் எல்லப்பன் என்பவருக்கு சொந்தமான நிலத்தை அவரது மகன்கள் முருகன்.மற்றும் சீனிவாசன் ஆகியோருக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு கிரையம் செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது தற்போது அந்த இடத்தை முருகன் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை பெரம்பூரைச் சேர்ந்த சாய்சிவசங்கர் என்பவர் தனக்குசொந்தமானது எனக் கூறி கடந்த 2022-ல் தகராறு செய்துவிட்டு சென்றுள்ளார். இது குறித்த புகாரில் உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராக காவல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் அந்த மனை அருகே உள்ள தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்குவதற்காக ஒப்பந்த அடிப்படையில் சிறு சிறு அறைகள் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் நள்ளிரவில் முகமூடி அணிந்த மர்ம கும்பல் ஜேசிபி உடன் வந்து கட்டப்பட்டு வரும் அறைகளை இடித்து தள்ளியும். முழுவதும் சேதப்படுத்தியும் பணியில் இருந்த காவலாளியிடம். நில உரிமையாளரை நேரில் வந்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டி சென்றுள்ளனர்.

இதை அடுத்து உரிமையாளர் முருகனுக்கு காவலாளி போன் செய்து தகவல் அளித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த முருகன் நள்ளிரவில் முகமூடி அணிந்து வந்து கட்டிடங்களை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார் முகமூடி அணிந்து ஜேசிபியுடன் வந்து கட்டிடத்தை இடுத்து தள்ளிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.