திருத்தணி முருகன் கோயிலில் தை மாத கிருத்திகை விழா ஒட்டி பக்தர்கள் காவடிகளுடன் மலை கோயிலுக்கு வந்து மூலவர் உற்சவரை பல மணி நேரம் காத்திருந்து தரிசனம்

பதிவு:2023-01-30 23:06:01

திருவள்ளூர் ஜன 30 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ளது ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாகத் திகழும் முருகன் கோயிலில் தை மாத கிருத்திகை விழா ஒட்டி பக்தர்கள் காவடிகளுடன் மலை கோயிலுக்கு வந்து மூலவர் உற்சவரை தரிசனம் செய்தனர். தை கிருத்திகையை முன்னிட்டு அதிகாலை 4:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மற்றும் மூலவருக்கு தங்க கவசம் தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.

காலை 9 மணிக்கு உற்சவர் காவடி மண்டபத்தில் எழுந்தருளினார். பின் பஞ்சாமிர்த அபிஷேகம் உச்சவருக்கு நடந்தது தொடர்ந்து தீபாராதனையும் நடைபெற்றது. தை கிருத்திகையையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலுக்கு வந்து பல மணி நேரம் காத்திருந்து மூலவர் உற்சவரை தரிசித்து செல்கின்றனர்.

பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற மொட்டை அடித்தும் மலர் காவடி, மயில் காவடி , பால் காவடி போன்ற காவடிகள் எடுத்து வந்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.