திருத்தணி அருகே 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கோரி கர்ப்பம் ஆக்கிய இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

பதிவு:2023-01-31 18:44:26



திருத்தணி அருகே 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கோரி கர்ப்பம் ஆக்கிய இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

திருத்தணி அருகே 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கோரி கர்ப்பம் ஆக்கிய இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

திருவள்ளூர் ஜன 31 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த நல்லாட்டூர் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி, அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ராஜராஜன் என்கின்ற டென்னி (வயது 28) என்பவர் மாணவியை காதலிக்க வற்புறுத்தி திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்நிலையில் சிறுமி வயிற்று வலி இருப்பதாகப் பெற்றோர்களிடம் கூறியதால், சிறுமியை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சிறுமி 6 மாத கர்ப்பிணியாக இருப்பதை உறுதி செய்தனர். இதுகுறித்து மாணவி திருத்தணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ராஜராஜன், மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட அவரது நண்பன் அப்புன் மீது புகார் அளித்தார்.

வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த இருவரையும் ஒரு வாரமாக தேடி வந்தனர்.இந்நிலையில் இன்று பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பம் ஆக்கிய ராஜராஜன் (எ) டென்னியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அப்புனை போலீசார் தேடி வருகின்றனர்.