போளிவாக்கம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ சண்முக நாயகன் ஆலயம் மற்றும் சித்தர்கள் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா :

பதிவு:2022-04-23 08:09:24

போளிவாக்கம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ சண்முக நாயகன் ஆலயம் மற்றும் சித்தர்கள் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா :

போளிவாக்கம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ சண்முக நாயகன் ஆலயம் மற்றும் சித்தர்கள் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா :

திருவள்ளூர் ஏப் 23 : திருவள்ளூர் அடுத்த போளிவாக்கம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ நித்தியானந்த சுவாமிகள் ஆசிரமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சண்முக நாயகன் ஆலயம் மற்றும் சித்தர்கள் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.

முன்னதாக கணபதி ஹோமம், முதல் யாகசாலை பூஜை மற்றும் தீபாராதனையுடன்‌தொடங்கி மாலை வாஸ்து ஹோமமும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து விசேஷ சாந்தி, இரண்டாவது யாகசாலை பூஜை, மகா தீபாராதனையுடன் கும்பாபிஷேக விழா ஆரம்பமானது.

அதனைத் தொடர்ந்து, பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை ஊர்வலமாக கொண்டு வந்து கோபுர கலசங்கள் மீது ஊற்றி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் போளிவாக்கம், மணவாள நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.