சிஐடியு சார்பில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

பதிவு:2023-01-31 18:47:16



சிஐடியு சார்பில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

சிஐடியு சார்பில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் ஜன 31 : பணி நிரந்தரம், ஊதிய உயர்வு , 7-வது ஊதியக்குழு நிலுவைத்தொகை, பணிக்கொடை ஓய்வூதியம் வழங்கக்கோரி சிஐடியு சார்பில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மாவட்ட தலைவர் சூரிய பிரகாஷ் தலைமை தாங்கினார். ஸ்டாலின்,லவக்குமார்,பரந்தாமன்,ரீட்டா,கோமதி, சண்முகம்,சௌந்தர்,சங்கர்,சிலம்பரசன், கோபி,கடம்பத்தூர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் விஜயன்,ராஜேந்திரன்,சந்தானம்,கதிர்வேலு,ரமேஷ்,பழனி,சீனிவாசன்,மாரி,ரமேஷ்குமார்,பலராமன்,பாஸ்கர் ஆகியோர் கண்டன உரையாற்றினார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகளின் குடிநீர் விநியோகம், சுகாதாரப் பணியில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்கள், ஓஎச்டி ஆப்பரேட்டர்கள், தூய்மைக் காவலர்கள், டிபிசி பணியாளர்கள் பள்ளி தூய்மைப் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய உயர்வு , 7-வது ஊதியக்குழு நிலுவைத்தொகை, பணிக்கொடை ஓய்வூதியம் வழங்கக்கோரி சிஐடியு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

அதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பாக காணப்பட்டது. இதனையடுத்து ஆட்சியர் அலுவலகத்தில் நுழைய முயன்றனர். அவர்களை போலீசார்தடுத்து நிறுத்தி 5 நிர்வாகிகளை மட்டும் ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளிக்க அனுப்பி வைத்தனர்.இறுதியில் மாவட்ட பொருளாளர் குமரவேலு நன்றி கூறினார்.