திருவள்ளூரில் கார் சேல்ஸ் அன்ட் சர்வீஸ் உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை கொள்ளை : போலீஸ் விசாரணை

பதிவு:2023-02-05 12:27:37



திருவள்ளூரில் கார் சேல்ஸ் அன்ட் சர்வீஸ் உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை கொள்ளை : போலீஸ் விசாரணை

திருவள்ளூரில் கார் சேல்ஸ் அன்ட் சர்வீஸ் உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை கொள்ளை : போலீஸ் விசாரணை

திருவள்ளூர் பிப் 04 : திருவள்ளூர் நகரின் மையப்பகுதியான வி.எம்.நகர், சமரியாஸ் நகரில் வசித்து வருபவர் கார்த்திகேயன். இவர் திருவள்ளூர் ஜே.என்.சாலையில் திருவள்ளூர் கார்ஸ் சேல்ஸ் அன்ட் சர்வீஸ் என்ற நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி சுமதி (38). இவர்களது மகள் ஷர்மி. இந்நிலையில் கார்த்திகேயனின் தாயார் இறந்துவிட்டதால் அவருக்கு காரியம் செய்வதற்காக நேற்று முன்தினம் (02.02.2023) மாலை குடும்பத்துடன் வீட்டை பூட்டிக் கொண்டு திருவள்ளூர் அடுத்த மணவாளநகருக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் நேற்று காரியம் முடிந்து இரவு டாக்குமெண்ட் எடுப்பதற்காக கார்த்திகேயன் மட்டும் வீ்ட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டின் கிரில் உடைக்கப்பட்டு இருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கார்த்திகேயன் உள்ளே சென்ற போது கதவின் பூட்டும் உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்த போது பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த 50 சவரன் நகை கொள்ளை போனது தெரியவந்தது.

இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து கார்த்திகேயன் திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் நகரின் மையப் பகுதியும் குடியிருப்புகள் நிறைந்த பகுதியுமான வி.எம்.நகரில் நடைபெற்ற இந்த கொள்ளைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.