பதிவு:2023-02-05 12:29:54
திருவள்ளூர் அடுத்த அரண்வாயல்குப்பத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியின் முதலாமாண்டு மாணவன் தூக்கிட்டு தற்கொலை : போலீசார் விசாரணை
திருவள்ளூர் பிப் 04 : ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் காவலி அடுத்த கௌரவரம் பகுதியைச் சேர்ந்த மேதரமெட்லா பிட்சி ரெட்டி என்பவரது மகன் மேதராமெட்லா சரண் என்பவர் திருவள்ளூர் அடுத்த அரண்வாயல் குப்பத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இசிஇ முதலாமாண்டு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து சக மாணவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கல்லூரி நிர்வாகம் செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் பிரேதத்தைக் கைப்பற்றி திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி முதலாமாண்டு மாணவன் கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.