பதிவு:2023-02-05 12:31:43
திருத்தணி அருகே வன காப்புக்காடு பகுதியில் இருந்து வெளியேறிய மான் விவசாய நிலத்திற்கு ஓட முயன்ற போது வேலியில் சிக்கி காயமடைந்த நிலையில் நாய்கள் கடித்துக் குதறியதால் வனத்துறையினர் மீட்டு சிகிச்சை
திருவள்ளூர் பிப் 04 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த கன்னிகாபுரம் வன காப்புக்காடு பகுதியில் இருந்து தண்ணீர் தேடி வந்த மான் அங்குள்ள விவசாய நிலத்திற்குள் ஓட முயற்சித்தது. அப்போது விவசாய நிலத்தை சுற்றி அமைத்துள்ள முள்வேளியில் சிக்கிய மான் பலத்த காயமடைந்தது.
இந்நிலையில் காயமடைந்த மான் ஓட முடியாத நிலையில் அங்குள்ள தெரு நாய்கள் மானை கடித்துக் குதறியது. இது குறித்து அப்பகுதி மக்கள் திருத்தணி வனத்துறையினருக்கு கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்து மானை மீட்டு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளித்து மீண்டும் திருத்தணி அருகே உள்ள வன காப்புக் காடு பகுதியில் விட்டதால் அந்தமான் துள்ளி குதித்து ஓடியது.