திருமணம் செய்து கொள்வதாக கூறி காவலர் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி வருவதாக ஆவடி காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பெண் பரபரப்பு புகார்

பதிவு:2023-02-08 14:53:05



திருமணம் செய்து கொள்வதாக கூறி காவலர் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி வருவதாக ஆவடி காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பெண் பரபரப்பு புகார்

திருமணம் செய்து கொள்வதாக கூறி காவலர் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி வருவதாக ஆவடி காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பெண் பரபரப்பு புகார்

திருவள்ளூர் பிப் 08 : சென்னை மணலி பகுதியை சேர்ந்தவர் சரிதா/38.கணவனை பிரிந்த நிலையில் தனது பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார். இவருக்கும் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணி புரிந்து வரும் செல்லத்துரை என்பவருக்கும் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.காவலர் செல்லத்துரை தானும் மனைவியை பிரிந்தவர் என கூறி பழகி வந்துள்ளார். இந்த நிலையில் தன்னை திருமணம் செய்வதாக கூறி நம்ப வைத்துளார்.

இதனை நம்பிய அப்பெண் அவருடன் தனிமையில் இருந்துள்ளார்.இதனை தொடர்ந்து தன்னை திருமணம் செய்துகொள்ளும் படி அப்பெண் வற்புறுத்தி வந்துள்ளார்.இதனை தட்டி கழித்து வந்த காவலர் செல்லத்துரை பிரச்சனை செய்துள்ளார்.இதனால் சந்தேகம் அடைந்த அப்பெண் அவரை பற்றி விசாரித்தபோது அவருக்கு ஏற்கனவே திருமணமாகி உள்ளது எனவும்,வேறு சில பெண்களுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.இதுபற்றி கேட்டபோது அவதூறாக பேசி தாக்குதல் நடத்தியுள்ளார்.தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சரிதா இதுகுறித்து சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து அவர் சஸ்பெண்ட் செய்பட்டுள்ளார்.இதன் பின்னர் காவலர் செல்லத்துரை இருவரும் சேர்ந்து இருந்ததை வீடியோவாக எடுத்து வைத்துள்ளார்.அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவதாக கூறி மிரட்டி பணம் பறித்துள்ளார்.இவ்வாறு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்த செல்லத்துரை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆவடி காவல் ஆணையரகத்தில் சரிதா புகார் அளித்துள்ளார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அப்பெண், காவலர் செல்லதுரை காவலர் என்பதால் காவல்துறை அவர்மீது நடவடிக்கை எடுப்பதில்லை எனவும்,அவருக்கு சாதகமாக செயல்படுவதாகவும் குற்றம்சாட்டி உள்ளார்.மேலும் தன்னுடன் பழகிய காலத்தில் அவருக்காக பல லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.எனவே அந்த காவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறியுள்ளார்.