பதிவு:2023-02-08 14:54:58
திருவள்ளூரில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தினை முன்னிட்டு வரும் 9 ம் தேதி அனைவரும் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வேண்டுகோள்
திருவள்ளூர் பிப் 08 : கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தினை முன்னிட்டு 09.02.2023 அன்று அனைவரும் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி எடுத்துக்கொள்ள மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 09.02.2023 அன்று காலை 11 மணிக்கு கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர் ஜான் வர்கீஸ் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் அனைவரும் உறுதிமொழியை ஏற்க உள்ளனர்.
மேலும், அனைத்து அரசு அலுவலகத்திலும் (பொதுத்துறை உள்பட) வரும் 09.02.2023 அன்று கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழியை அனைவரும் தவறாது மேற்கொள்ளுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.