பதிவு:2023-02-09 19:35:57
அம்பத்தூரில் கம்பளி போர்வை விற்பது போல் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வட மாநிலத்தவர்கள் இருவர் கைது : 5.5 கிலோ கஞ்சா பறிமுதல்
திருவள்ளூர் பிப் 09 : அம்பத்தூர் அருகே பட்டறை வாக்கம் ரயில் நிலையம் அருகே வடமாநிலத்தவர்கள் இருவர் கம்பளி போர்வை விற்பது போல் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவது குறித்து அம்பத்தூர் அமலாக்கு துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து ஆய்வாளர் தனம்மாள் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அங்கு விற்பனையில் ஈடுபட்டு வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ரமேஷ் பால், லால்சன் லைமா ஆகிய இருவரை சுற்றி வளைத்து பிடித்தனர்.
இவர்களிடமிருந்து 5.5கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த நிலையில் இருவரையும் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து மேற்கொண்ட விசாரணையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர் இதனை அடுத்து இருவரையும் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.