திருவள்ளூர் அருகே சினிமா பார்த்துவிட்டு வெளியே வந்த இளைஞரை முன்விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டிய வீடியோ வைரல் : 6 பேர் கைது :

பதிவு:2022-04-23 16:28:31

திருவள்ளூர் ஏப் 23 : திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் ஒண்டிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ் இவர் தனது நண்பர்களுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அப்பகுதியில் நடந்த கோவில் திருவிழாவில் எதிர் தரப்பினரை தாக்கிவிட்டு அப்பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா திரையரங்கில் நண்பர்களுடன் இரவு காட்சி பார்த்துவிட்டு வெளியே வந்தபோது திரையரங்கு வாசலில் இருசக்கர வாகனத்தில் காத்திருந்த எதிர்தரப்பினர் ஆகாஷ் மற்றும் அவருடைய நண்பர்கள் அரிவாளால் வெட்டியும் இரும்புக் கம்பிகளால் தாக்கியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து இது தொடர்பாக மணவாள நகர் காவல்துறையினர் தலைமறைவான 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்த நிலையில் அதில் ராகுல் (21), பிரவீன் ராஜ் (22), பாலசுப்பிரமணி (21), யுவராஜ் (19), விக்னேஷ் (20), ஹரிஷ் குமார் (17 ) உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள வெங்கடேசன் (25) காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

அரிவாள் வெட்டில் காயமடைந்த ஆகாஷ் உள்ளிட்ட நண்பர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். திருவள்ளூர் மாவட்டத்தில் கொலை கொள்ளை வழிப்பறி கஞ்சா விற்பனை செம்மரக்கட்டை கடத்தல் போன்ற அனைத்தும் சர்வசாதாரணமாக நடக்கும் நிலையில் முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவரை அரிவாளால் வெட்டியும் இரும்புக் கம்பியால் தாக்கிய சம்பவம் அரங்கேறி மக்களை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.