திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 51 பேரிடம் ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் மோசடிசெய்த வழக்கில் புகார் கொடுத்தவரே முதல் குற்றவாளி- விசாரணையில் அம்பலம் : மேலும் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்

பதிவு:2023-02-11 18:15:59

திருவள்ளூர் பிப் 11 : திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு சுற்றுலா மாளிகை மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி 51 பேரிடம் சுமார் ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு கொரோனா காலத்தில் சில அதிகாரிகளின் துணையோடு போலி பணி நியமன ஆணை வழங்கி அவர்களுக்கு அதற்காக ஆறு மாதங்கள் ஊதியம் கொடுத்தும் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

இது குறித்து கடந்த ஜனவரி மாதம் 9-ந் தேதி திருவள்ளூர் மாவட்ட எஸ்பி., அலுவலகத்தில் திருப்பாச்சூர் பகுதியைச் சேர்ந்த எஸ்.வசந்தகுமார் என்பவர் மாவட்ட கலெக்டர் அலுவலக பணியாளர் ஸ்டாலின், பூந்தமல்லி ஹாஸ்டல் வார்டன் மோகன், அவரது மனைவி ஜானகி, நகராட்சி அலுவலக ஒப்பந்த ஊழியரான வத்சலா ஆகிய 4 பேர் மீது புகார் அளித்தார்.

இந்த மோசடி குறித்து வழக்குப்பதிவு செய்த மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி. சந்திரதாசன் தலைமையிலான காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில் புகார் கொடுக்க வந்த எஸ்.வசந்தகுமார் என்பவர் காக்களூர் பைபாஸ் சாலையில் வாடகைக்கு அறை எடுத்து இந்த மோசடியில் ஈடுபட்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

மேலும் கொரோனா காலத்தில் கலெக்டர் அலுவலகத்திற்கு உள்ளே வரும் நபர்கள் நுழைவாயிலில் கையெழுத்திட்டு உள்ளே வர வேண்டும் என்ற விதியை பயன்படுத்தி பணியில் சேர்த்த 51 பேரையும் கலெக்டர் அலுவலகத்திற்கு வரவழைத்து, அங்கு அவர்களை கையெழுத்திடச் செய்து, தாங்களும் கலெக்டர் அலுவலகத்தில் கையெழுத்திட்டு பணிபுரிகிறோம் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து எஸ்.வசந்தகுமாரை கைது செய்த காவல்துறையினர் அவரிடமிருந்த போலி முத்திரைகள், கணினி, லேப்டாப் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து தொடர் விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் கலெக்டர் அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் அதிகாரிகளின் துணையோடு விருந்தினர் மாளிகையை பராமரிப்பது, தோட்ட வேலை உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தி அவர்களுக்கு ஆறு மாதம் ஊதியம் வழங்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து 4 பேர் மீது புகார் கொடுத்த எஸ்.வசந்தகுமாரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இந்த மோசடி சம்பவத்தில் நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதில் முக்கிய பிரமுகர்கள் பலரும் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.